"""காதலும் நட்பும் வாழ?""""

வண்ணங்கள் பார்த்து
வரும் நட்பு
வாழ்வதில்லை ,,,,,,,,,,,,
எண்ணங்களால்
உதித்த நட்பு
என்றும் அழிவதில்லை .....
நிறம் பார்த்து வந்த நட்பு
நிலைப்பதில்லை ,,,,,,,,,,
மனம் பார்த்து வந்த நட்பு
மாறுவதில்லை .............
அன்பிலா அகமுடையவற்கு
அழகான முகமிருந்து
என்ன பயன்?
அன்பானவர்கள்
அழகான
பொருள்களை
நேசிப்பதில்லை ....
அவர்கள் நேசிக்கபடுவதால்
அது
அழகாய் தெரிகிறது...............
காதலிலும் நட்பிலும்
கண்ணை நம்பாதே !!!!!!
உள்ளத்தை நேசி
உயர்வாக இருக்கும்
அந்த காதலும் நட்பும் !!!!!!