நாலு ருபாய் நாணயம்

ஒரு ருபாய் நாணயம் இரண்டும்
இரண்டு ருபாய் நாணயம் ஒன்றும்
என்னிடம் கொடுத்துவிட்டு
"அப்பா இந்தா வச்சுக்கோ எனக்கு
பல்சர் வாங்கி கொடு " என்று
சொல்லும் என் நாலு வயது மகனிடம்
எதைச் சொல்ல?
இன்னும் இருபது ஆண்டுகள் போகட்டும் என்றா ?
இல்லை
நடுத்தரவர்க்கம்
இன்னும் இருபது ஆண்டுகளுக்கு பின்
இந்தியாவில் என்ன செய்யும் என்பதையா ?