காதல் செய் தோழா

காதல் செய் தோழா,
உன் காதலியை -
மலராக அல்ல ...
மலரை விரும்பாதவர்
யாருமே இல்லை.
காதல் செய் தோழா,
உன் காதலியை -
வானமாக அல்ல ...
வானம் இந்த
உலகிற்கே சொந்தம்.
காதல் செய் தோழா,
உன் காதலியை -
கவிதையாக அல்ல ...
கவிஞர்கள் நம் நாட்டில்
ஏராளம்.
காதல் செய் தோழா,
உன் காதலியை -
நிலவாக அல்ல ...
நிலவை ரசிக்காதவர்
யாரேனும் உண்டோ.
காதல் செய் தோழா,
உன் காதலியை -
உன் உயிராக மட்டும் !
உன் உயிர்
உனக்குமட்டுமே சொந்தம்.
காதல் செய் தோழா,
உன் காதலியை !