வந்தவர் எல்லாம்...
பழைய கல்லறைகள் பாவமாய்
அழுக்குச் சிலுவை சுமக்க
புதுக் கல்லறைகள் பக்குவமாய்
புது மலர்களோடு அலங்கரித்து இருக்க...
இன்று உயிரோடு பார்க்கும் கண்கள் சொல்வது-
ஒவ்வொரு சிலுவையின் கதைகள் என்னவோ?
நானும் ஒரு சிலுவை சுமப்பேனோ ஓர் நாள்?
அசையாததைக் கண்டு அசைவது ஏனோ பயம் கொள்கிறது...