அடைக்கும் தாழ்
ஆறடி மனிதன் பூனைக் குட்டி போல்
மெதுவாய் மெதுவாய் குனிந்து நடக்கிறான்
மூன்று வயதுக் குழந்தையின் பின்னால்...
வசீகரிக்கும் அன்பிலே கரைந்து
அடிமையாய்ப் பணிந்து
பாதுகாப்பாய்க் கூடப் போகும் பாதை...
இந்தப் புல்வெளி மட்டும் அல்ல
இருபது வருட நீண்ட பயணம் இது என்ற
களைப்பென்பதையே அறியாமல்...