என்றென்றும் எந்தன் அப்பா

தனக்கென வாழா ஆசை கொண்டவரே !

தன் கைலியில் என்னை தொட்டில் சுமந்தவரே !

தலைக்கு மேல் கடன் இருந்த பொழுதும்,
முகத்தில் புன்னகையுடன் நாம் பணக்காரர் என்று சொல்லி வளர்த்தவரே !

நீங்கள் கோவம் கொள்கையில் நம் குலதெய்வ சாமியை போல் என் கண்களில் உங்கள் முகம் !

குடிகார அப்பன் எனக்கில்லை !

இருந்தும் உங்கள் பீடி கட்டை ஒலித்து வைக்கும் பழக்கத்தை நான் இன்னும் நிறுத்தவில்லை !

அழகு தான் அம்மாவின் சண்டையில் நீங்கள் படும் அவஸ்த்தை கூட !

என் புன்னகைக்காய் நீங்கள் கொண்ட பட்டாசு காயம் இன்றும் சங்கு சக்கரமாய் சுழல்கிறது மனதில் !

விழுந்து எழுந்து நடக்க கற்று கொண்டேன் உங்களிடமிருந்து ,

அடி பட்டும் ! வலியால் அகப்பட்டும் !
பலர் இவனால் நடக்கவும் , உழைக்கவும் முடியாது என புறம் பேசியும் !

தாங்கி தாங்கி எழுந்து நடந்து எங்களை தாங்கியவர் அல்லவா நீங்கள் !

இன்றும் தாங்குபவர் அல்லவா நீங்கள் !


Close (X)

0 (0)
  

மேலே