உன்ன பார்த்து நாளாச்சுடி

வெள்ளிமணி கொலுசு
வச்சிருக்கேன் உனக்கு
போட்டுவிடத் துடிக்கிறேன் ராசாத்தி !
மாமனோட மனசு
ஏக்கத்துல கிடக்கு
தள்ளித் தள்ளிப் போவதென்ன ஏமாத்தி !

உன்ன பார்த்து நாளாச்சுடி
என் தேகம் நூலாச்சுடி

(வெள்ளிமணி)

தண்ணிக்கொடம் எடுத்து நீ
போகையிலே -நான்
தாகத்தோட நின்னிருந்தேன்
பாக்கலையா
கோயிலுக்கு கும்புட நீ
போகையில -நான்
கூடக் கூட சுத்திவந்தேன்
நெனப்பில்லையா
உன்னை வச்சு உசிருல பூட்டிக்கிட்டேன் -நம்மை
சேர்த்துவைக்க சாமிகிட்ட நேந்துகிட்டேன் !

(வெள்ளிமணி)

@இளவெண்மணியன்

எழுதியவர் : இளவெண்மணியன் (15-Sep-17, 7:23 am)
சேர்த்தது : இளவெண்மணியன்
பார்வை : 334

மேலே