என் உயிரினும் மேலான - நெடுந்தொடர் - - - பாகம் 40

"ஏய் என்ன டா ரெண்டு பேரும் இப்படி பேசாம உம்முன்னு உக்காந்துட்டு இருக்கீங்க" என்றபடி நர்கீஸ் உள்ளே வந்தாள்.

"விஜி, நாம கெளம்பலாமா, மணி ஆயிருச்சு" என்றாள் காயத்ரி.

"ம்ம்ம், போலாம், நர்கீஸ் அக்கா, நான் எல்லாரயும் கஷ்ட படுத்திட்டேன், நீங்க பர்ஸ்ட் முபாரக் அண்ணா விஜய் அண்ணா ரியாஸ் அண்ணா எல்லார்கிட்டயும் நான் சாரி கேட்டதா சொல்லுங்க, நான் என்னை நானே சமாதானப்படுத்திக்கிட்டு இந்த கில்டி கான்ஷியஸ்ல இருந்து வெளில வந்து கால் பண்றேன் னு சொல்லுங்க, என்மேல அவங்க வெச்சுருக்கற நம்பிக்கை பாசம் எல்லாத்துக்கும் நான் டிசேர்வ்டா ன்னு தெரில, பட் கண்டிப்பா அவங்க யாரையும் நான் இனிமே கஷ்டப்படுத்த மாட்டேன், என்கிட்டே இருந்து யாரும் விலகி போகவேண்டாம் னு சொல்லுங்க,நான் கிளம்பறேன் அக்கா" என்றாள் விஜி.

விஜியின் இந்த மாற்றத்தை கண்டு காயத்ரி நர்கீஸ் இருவரும் உள்ளுக்குள் மகிழ்ந்தனர்.

"அக்கா, என்னால தான் இவ்ளோ பிரச்சனை வந்துச்சு இன்னிக்கு, உங்கள முபாரக் அண்ணன் அடிச்சது, பிரவீன் முபாரக் அண்ணனை அடிச்சது, விஜி என்னை அடிச்சது எல்லாமே என்னால தான், நான் உண்மையா விஜய்கிட்ட சொல்லி இருக்க கூடாது, சாரி அக்கா" என்றாள் காயத்ரி.

"முபாரக் அடிச்சது எல்லாம் பெரிய மேட்டர் இல்ல காயத்ரி, விஜி புரிஞ்சுக்கிட்டா, மத்த எல்லாரும் எல்லா விஷயத்திரியும் அண்டர்ஸ்டெண்ட் பண்ணிக்குவாங்க, நீ ஒன்னும் பீல் பண்ணாத, பாத்து போயிட்டு வா, நீங்களே போறிங்களா, இல்லை பிரவீனை டிராப் பண்ண சொல்லவா?" என்றாள் நர்கீஸ்.

"இல்லக்கா, நாங்க கன்னிகா பரமேஸ்வரி ஸ்டோர்ஸ் போகணும், கெளம்பறோம்" என்றாள் விஜி.

"இல்லை விஜி, டைம் ஆயிருச்சு, வேற ஒரு நாள் பாத்துக்கலாம், இப்போ நாம வளவனூர் போய்டலாம்" என்றாள் காயத்ரி.

"அப்போ சரி, பிரவீன் டிராப் பண்ணட்டும், ஆனா வளவனூர் பஸ் ஸ்டாப் ல விட்டுட்டா போதும்" என்றாள் விஜி.

"சரி, பிரவீன், சொன்ன மாதிரி வளவனூர் ஸ்டாப்பிங்க்ல விட்டுட்டு நீ கெளம்பு, முபாரக்க போய் பாரு, நைட்டே பாரு, அவனை அடிச்சுட்ட இல்ல, போ, போய் பாரு, பாத்துட்டு எனக்கு போன் பண்ணு, அது மட்டும் இல்ல, இது வாப்பா கார், நைட் வீட்ல எந்த நேரமா இருந்தாலும் விட்டுட்டு போ" என்றாள் நர்கீஸ்.

மூவரும் கிளம்பினர்.

அவர்கள் சென்றதும், நர்கீஸ் முபாரக்கிற்கு கால் செய்தாள்.

"டேய் லூசு பொறுமையா அறைவன்னு பாத்தா, இப்படியா அறைவ, கன்னம் செவந்து போச்சு டா, இப்போ வீட்ல கேட்டா நான் என்ன சொல்லி சமாளிக்கறது, எரும" என்றாள் நர்கீஸ்.

"இல்ல நர்கீஸ், நீ என்ன இருந்தாலும் காயத்ரி கிட்ட எல்லாத்தையும் சொல்லி இருக்க கூடாது, பிரவீன் என்னை பத்தி என்ன நினைப்பான், உன்னை பத்தி என்ன நினைப்பான், நாங்க எல்லாம் ஒரு விஷயம் யார் கிட்டயும் சொல்ல கூடாதுன்னு சொன்னா அது பிக்ஸ் யார் கிட்டயும் சொல்ல மாட்டோம், இனிமே அப்டி தப்பு பண்ணாத" என்றான் முபாரக்.

"இல்ல டா அன்னிக்கு நெஜமாவே காயத்ரி எல்லாத்தையும் கேட்டுட்டா, அவ தூங்கலை, ப்ராமிஸ்" என்றாள் நர்கீஸ்.

"நான் நம்பறேன் நர்கீஸ், ஆனா பிரவீன் நம்பனும் னு எந்த அவசியமும் இல்ல, அவன் என்ன நெனைச்சானோ" என்றான் முபாரக்.

"டேய், அது சரி, என்னை நீ அடிச்சதுக்கு அவன் எதுக்கு உன்ன அப்டி அடிச்சான், பாவம் உனக்கு தலை அப்டி பணியாரம் மாதிரி வீங்கி போச்சு டா,வலிக்குதா, சரியான காட்டான் அந்த பிரவீன்" என்றாள் நர்கீஸ்.

"ஏய் அப்டி எல்லாம் இல்ல, அவனுக்கு உன்மேல ஒரு தனி மரியாதை இருக்கு, அடிக்கடி உன்னை பர்ஹி பேசும்போதெல்லாம் எனக்கு என் அம்மாவுக்கு அப்புறம் அதிகம் பாசம் காற்றது நர்கீஸ் தான் னு சொல்லுவான், அதான், நானே உன்னை பத்தி பேசும்போது நீ ரொம்ப ப்ளேட் போடுவ, அறுவை அப்டி இப்படின்னு சொல்லும்போது அவன் உன்னை விட்டுகுடுக்காம பேசுவான்" என்றான் முபாரக்.

"டேய் உன்னை விட சின்ன பையன், அதும் நீ கல்யாணம் பண்ணிக்கற பொண்ணுக்கு முன்னாடி, உன்னோட பிரென்ட் கு முன்னாடி, ரெண்டு வேற பொண்ணுங்களுக்கு முன்னாடி உன்னை கை நீட்டி அடிச்சிருக்கான், உனக்கு அசிங்கமாவே இல்லையா டா" என்றாள் நர்கீஸ்.

"நான் ஏதோ தப்பு செஞ்சதால தான் அவன் அடிச்சான், இன்னிக்கு இப்போ அவன் அடிச்சான் னு அவன்மேல் நான் கோவப்பட்டேன் னா எங்க பிரெண்ட்ஷிப் கு எந்த அர்த்தம் இல்லாம போய்டும், நான் அப்புறம் பேசறேன் நர்கீஸ்" என்றான் முபாரக்.

பிரவீன் காரை ஒட்டிக்கொண்டு மிதமான வேகத்தில் ஏதும் பேசாமல் போனான். விஜி காயத்ரி இருவருமே பின்னால் உட்கார்ந்து கொண்டனர்.

"பிரவீன் அண்ணா, விஜி என்னை அடிச்சத பாத்திங்களா" என்றாள் காயத்ரி.

அமைதியாக வந்தான் பிரவீன்.

"காயத்ரி, சும்மா வா" என்றாள் விஜி.

"நீ எதுக்கு டி அப்டி அடிச்ச என்ன" என்றாள் காயத்ரி. பிரவீன் காதில் விழாமல் பொறுமையாக கேட்டாள்.

"நீ பிரவீனை சைக்கோ னு சொன்னது எனக்கு பிடிக்கல." என்றாள் விஜி. இவளும் பொறுமையாக பதிலை பிரவீன் காதில் விழாமல் சொன்னாள்.

"ஏய், நீ பிரவீனையே பிடிக்காதுன்னு சொல்லி பேசாம இருந்த, இப்போ என்ன திடீர் பாசம்" என்றாள் காயத்ரி.

"இல்ல டி, எனக்கு அவனை ரொம்ப பிடிக்கும், ஆனா பலமுறை நீ சொல்லிருக்க, எதுக்கு அவன்மேல் இவ்ளோ பாசம் வருதுன்னு, நாஙும் யோசிச்சேன், இவ்ளோ டீப் ரிலேஷன்ஷிப் கூடாது, இது என்ன மாதிரி வேணாலும் மாறும், என்னையும் மீறி அவன் என் மனசுல வந்துட்டானோன்னு தோணுச்சு, அதை அவாய்ட் பண்ண தான் அப்டி நடந்துக்கிட்டேன், அப்டி பண்ணினா அவன் என்னை விட்டு விலகிப்போவான் னு நெனச்சேன், அதான் அவனை ஹர்ட் பண்ணறமாதிரி பேசினேன், எனக்குள்ளேயே அவன் விலகிப்போறான் னு ஒரு வெறுப்பை உருவாக்கிக்கிட்டேன், ஆனா இந்த எல்லா விஷயமும் அவன் தான் பண்ணிருக்கான் னு தெரிஞ்சதும் முன்னாடி இருந்ததைவிட பலமடங்கு பாசம் அவன்மேல் அதிகமாயிருச்சு டி,என்ன பண்றதுன்னே தெரில" என்றாள் விஜி.

"இந்த பாசத்துக்கு என்ன அர்த்தம் விஜி, ஒண்ணுமட்டும் நல்லா சொல்றேன்,மனசுக்கு புடிச்சவங்கள வெலகிப்போக வெக்க வெக்க அவங்கமேல இருக்கற அந்த அற்றாக்ஷன் இன்னும் இன்னும் அதிகமாயிட்டு தான் இருக்கும்" என்றாள் காயத்ரி.

"ஆனா அவன் என்ன நெனைக்கறான் னு தெரிலயே டி, இப்டி பேசாமயே வரான்" என்றாள் விஜி.

"டேவிட் உன்னை லவ் பண்ரான் னு அவனுக்கு தெரியும், அதைவெச்சு இப்போ பேசி அவனோட ரியாக்ஷனை பாத்து அவன் என்ன மெண்டாலிட்டில இருக்கான் னு பாப்போம்" என்றாள் காயத்ரி.

"என்ன டி சொல்ற, டேவிட் விஷயம் அவனுக்கு எப்படி தெரியும்" என்றாள் விஜி.

அந்த காரில் நடந்த விஷயத்தை விஜய்யிடம் கூறினாள் காயத்ரி. விஜிக்கு தர்மம் சங்கடமாக இருந்தது.

"இப்போ என்னடி பண்றது, நீ ஏன் டி அதை அவனுக்கு தெரியற மாதிரி சொன்ன" என்றாள் விஜி.

"முடிஞ்சதை பத்தி பேசவேணாம், இரு இப்போ பாரு" என்றபடி "விஜி, டேவிட் என்ன சொல்றான் இப்போ, ஓகேவா?" என்று சத்தமாக கூறினாள் காயத்ரி.

"ஏய் என்ன டி நீ....இப்டி பண்ற, சும்மா வா" என்றாள் விஜி.

"சும்மா சொல்லு விஜி, டேவிட் செம பணக்காரன், நம்ம ரோஸெலின் அண்ணன், அதுமட்டும் இல்ல, உன்னை ரொம்ப சீரியஸா லவ் பண்ரான்" என்றாள் காயத்ரி.

"காயத்ரி...." என்றாள் விஜி.

"நீ சும்மா இரு, உனக்கு ஒண்ணும் தெரியாது, என்ன பிரவீன் அண்ணா, டேவிட் விஜிக்கு நல்ல ஜோடி தான அண்ணா? என்றாள் காயத்ரி.

"இதுல என்னோட கருத்து என்ன இம்பாக்ட் தர போகுது காயத்ரி. விஜிக்கு ஓகே ன்னா அவ்ளோ தான்" என்றான் பிரவீன்.

"இல்ல, ஜோடி பொருத்தம் எப்படி இருக்கும் னு சொல்லுங்க" என்றாள் காயத்ரி.

"காயத்ரி, விஜி யாரை லவ் பண்ணினாலும் அந்த ஜோடி பொருத்தம் அற்புதமா மாறிடும், ஏன் னா விஜி ஒரு தேவதை, அவங்க யாரை லவ் பண்ணினாலும் அந்த காதல் ஒரு தெய்வீகமாயிடும், விஜியோட நல்ல மனசுக்கு அவங்க யாரை லவ் பண்ணினாலும் அவங்க சந்தோஷமா இருப்பாங்க" என்றான் பிரவீன்.

"பாத்தியா டி, பிரவீன் சொல்லிட்டான், செம ஜோடி தான்" என்றாள் காயத்ரி.

"காயத்ரி, நீ சும்மா வா" என்றாள் விஜி.

"ஏய்....அங்க பாரு, பிரவீன் முகம் எப்படி மாறிப்போச்சு பாரு, அவன் மனசுல நீ தான் டி இருக்க, நீ வேற ஒருத்தன லவ் பண்றன்னு அவனால ஏத்துக்க முடியாம தவிக்கிறான் பாரு" என்றாள் காயத்ரி.

"ஏய் அவனோட இந்த ரியாக்ஷன் இன்னிக்கு நடந்த சண்டையால் இருக்கலாம் டி, எதையும் உடனே முடிவு பண்ண முடியாது, நீ பேசாம வா" என்றாள் விஜி.

வளவனூர் வந்தது.

இருவரும் இறங்கிக்கொண்டனர்.

"நாங்க கெளம்பறோம் பிரவீன், பாத்து போங்க, டேக் கேர், நான் உங்கள ரொம்ப ஹர்ட் பண்ணிட்டேன், சாரி பிரவீன்" என்றாள் விஜி.

"பரவால்ல விஜி, நீங்க எதுக்கு சாரி எல்லாம் கேக்கறீங்க, நீங்க ஹர்ட் பண்ணல விஜி, பாத்து போங்க, நான் உங்ககூட பேசாம இருந்ததும் சாரி" என்றான் பிரவீன்.

"இல்ல பிரவீன், நான் தான பேசாதன்னு சொன்னேன்" என்றாள் விஜி.

"அந்த டேவிட் பையன லவ் பண்றீங்களா விஜி?" என்றான் பிரவீன்.

"இல்ல பிரவீன், அவன் தான் தொடர்ந்து ப்ரபோஸ் பண்ணிட்டு இருக்கான், ஆனா அவன் ரொம்ப சின்சியரா இருக்கான், எனக்கு எந்த இன்டெரெஸ்ட்டும் இல்ல பிரவீன்" என்றாள் விஜி.

"சரி விஜி, நீங்க கிளம்புங்க, காயத்ரி நீங்களும் கிளம்புங்க" என்றான் பிரவீன்.

விஜி பிரவீனின் கையை பிடித்துக்கொண்டு "என்மேல இன்னும் கோவமா, உண்மையா சொல்லுங்க பிரவீன்" என்றாள்.

"கண்டிப்பா கோவம் இல்ல விஜி, உங்கமேல என்னிக்கு எனக்கு கோவம் வருதோ அது என்னோட கடைசி நாளா இருக்கும் என் வாழ்க்கைல" என்றான் பிரவீன்.

பிரவீனின் வாயில் தனது கையை வைத்து மூடினாள். "அப்டி எல்லாம் சொல்லாதீங்க பிரவீன், நீங்க இல்லன்னா நான் இல்ல" என்றாள் விஜி.

"போலாம் விஜி, மணி ஆயிருச்சு" என்றாள் காயத்ரி.

பிரவீன் கிளம்பினான்.

"விஜி, எதுக்கு நீ பிரவீன் கிட்ட நீங்க இல்லன்னா நான் இல்ல னு சொன்ன?" என்றாள் காயத்ரி.

"தெரில டி, ஆனா அவன் என் மனசு பூரா இருக்கான் டி, இது என்னன்னு தெரில, அவனோட மெமரி, அவனோட டேலண்ட் அவனோட பிஹேவியர் அவனோட அப்ப்ரோச் எல்லாம் முதல்ல எனக்கு ஒரு அட்டராக்ஷண உண்டாக்கிச்சு, அவன் என் ரோல் மாடல் ஆயிட்டான் டி, எல்லா விஷயத்துலயும் அவனை பாலோ பண்ண ஆரம்பிச்சேன், ஆனா இந்த கோவம் இந்த குடும்பம் இது ரெண்டை மீறி அவனை நெருங்க முடில டி" என்றாள் விஜி.

"விஜி, போய் நல்லா தூங்கு, நல்லா யோசி, நாளைக்கு பாக்கலாம்" என்றாள் காயத்ரி.

பெருத்த யோசனையோடு தனது வீட்டை நோக்கி நடந்தாள் விஜி.

பகுதி ௪௦ முடிந்தது.

--------தொடரும்-------------

எழுதியவர் : ஜெயராமன் (15-Sep-17, 4:23 pm)
சேர்த்தது : நிழலின் குரல்
பார்வை : 307

மேலே