தன்னம்பிக்கை
*நம்பிக்கை!!*
ஒரு கம்பெனியில் 50 கோடி நஷ்டத்தின் காரணமாக அந்த கம்பெனியின் முதலாளி மிகவும் மனமுடைந்து சோகத்துடன் இருந்தார். என்ன செய்வது என்று தெரியவில்லை? அவருக்கு தனிமை தேவைப்பட்டது. அவர் ஒரு பூங்காவில் அமர்ந்ததார் அப்போது ஒரு கோட் சூட்போட்ட வயதான முதியவர் வந்தார். அவர் பார்க்க மிகப்பெரிய பணக்காரராக தென்பட்டார். அவர் அந்த முதலாளியிடம் என நடந்தது தம்பி ஏன் இவ்வளவு கவலை என்று கேட்டார். அந்த முதலாளி நடந்ததை சொன்னார். இவ்வளவு தான இந்த பணம் கிடைத்தால் உன் கவலை தீரும் அல்லவா! என்றார். நான் உனக்கு ஒரு 50 கோடி இல்லை 100 கோடி தருகிறேன். நீ இதை ஒரு வருடத்திற்கு பிறகு இதே நாளில் திருப்பி தந்தாள் போதும் என்று சொல்லி செக்கை கொடுத்தார். சரி என்றான் அவன், அவனுக்கு அதில் புத்துணர்ச்சி கிடைத்தது. கம்பெனிக்கு சென்று இப்பொது என்னிடம் ௧௦௦ கோடி உள்ளது. அனால் நான் இதை எடுக்க மாட்டேன் இப்பொது நம் கம்பெனியில் 50 கோடி நஷ்டத்திற்க்கான காரணம் என்ன என்று கேட்டான். முதலில் இதை சரி செய்வோம். மிகுந்த மகிழ்ச்சியுடன் அனைவரும் வேலை செய்தனர். அவன் மிகப்பெரிய பண்ணைக்காரனாக உயர்ந்தான் ஒரு வருடம் முடிந்தது.அவர் அந்த பூங்காவில் அதே இடத்தில் 100 கோடியுடன் அவருக்காக காத்திருந்தார். அப்போது முதியவரும் அவரது மனைவியும் வந்துக்கொண்டிருந்தனர். சிறிது நேரத்தில் அம்முதியவர் தென்படவில்லை. அப்போது அவன் உங்க கூட வந்த முதியவர் எங்கே என்றான். ஏன் தம்பி அவர் உங்களிடமும் செக் கொடுத்தாரா!! ஆமாம்... அவருக்கு இதே வேலை தான்ப்பா இங்கு வருபவருக்கெல்லாம் செக் கொடுத்து விடுவார். இதில் உங்களுக்கு என்ன புரிந்தது ??? அவன்அந்த செக் ல இருந்து ஒரு ரூபாய் எடுக்கல.
கொடுத்த செக் போலியானது என்றாலும் அந்த ஒரு தூண்டுதல் அவனுக்கு தேவை பட்டது undefined அது போல நமக்கு கஷ்டங்கள் வரும் பொதும் சரி ஒரு சொல்லை நாம் செய்யமுடியாத நிலை வரும்போதும் சரி முதலாளி நம்மால் முடியும் என நம்பிக்கை வைக்க வேண்டும் அவ்வாறு நம்பிக்கை வைத்தால் முடியாது என்று நினைத்தது கூட நம்மால் முடிக்க முடியும்.
“முடிந்ததை செய் முடியாது என்றால் அதை முடிக்க முடியும் என்று நம்பிக்கை வை அதை தானாக உன்னால் முடிக்க முடியும்.”