வண்ணமிகு திருமண வாழ்த்து

வாழ்க்கைப் பயணத்தின்
இனிய துவக்க விழா
துணையொடு கரமிணையும்
வண்ணமிகு திருமண விழா

செல்வன் ______
செல்வி ______
இணைபிரியா வாழ்க்கையிலே
இன்பமே என்றும் கொள்வீர்

முடிச்சுப் போட்ட வாழ்க்கையிலே
முடிவில்லா மகிழ்ச்சி காண்பீர்
செல்வங்கள் பதினாறும்
குறைவின்றி நீவீர் பெறுவீர்!!!

வாழையாய் வம்சம் தழைக்கும்
வளமுடன் வாழ்க்கை செழிக்கும்
கருத்தொருமித்த தம்பதியராய்
சுற்றம் வியக்கும் வாழ்வை காண்பீர்!!!

உதாரணத் தம்பதியராய்
ஊர் போற்ற... உறவும் போற்ற...
இணைபிரியாத வாழ்வினிலே
நூறாண்டு காலம் வாழ்ந்திடவே

உளம் கனிந்த நல்வாழ்த்துக்கள்....

எழுதியவர் : (16-Sep-17, 12:49 pm)
சேர்த்தது : ராஜ்குமார்
பார்வை : 30379

மேலே