நிலவுக் காதல்

மேகக் கூட்டம் நடுவினிலே வெண்ணிலவை கண்டேனே ,,,,,,,!

அந்நிலைவை காண வேண்டி விண்வெளிக்கு சென்றேனே ,,,,,,,!

என்னை கண்டும் காணாமல் செல்லும் உன்னை ,,,,,,!

என் வீட்டில் சிறை பிடிக்க நோட்டம் கொண்டேனே ,,,,,,!

வளர் பிறை வரும் பொழுது எல்லாம் நீ மட்டும் வளர வில்லை என் மன காதலும் தான் ,,,,,,,!

தேய்பிறை வரும் பொழுது எல்லாம் நீ மட்டும் தேயவில்லை உன்னை தேடி என் கால்களும் தான் ,,,,,,,!

இன்று தான் புரிகிறது அம்மாவாசை அன்று மட்டும் ஏன் பைத்தியம் முத்துகிறதென ,,,,,,,!

கார்மேக கூட்டமதில் நீ காட்டும் கண்ணாமூச்சி என் விழிகளில் மழையாக ,,,,,,!

எழுதியவர் : தமிழரசன் (18-Sep-17, 1:17 pm)
பார்வை : 427

மேலே