நான் கன்கா-டீ

அடியே கனகா, என்னோட உயிர்த் தோழி லக்னோவிலிருந்து எப்ப நீ மாற்றலாகி வந்தே.
😊😊😊😊😊😊
நான் பதவி உயர்வு பெற்று லக்னோ போயி நாலு வருசம் கழிச்சுத்தான் வந்தேன். நான் சென்னைக்கு வர்றத அம்மா அப்பாவுக்கூட சொல்லாம தீடீர்னு வந்து அவங்கள ஆனந்தக் கண்ணீர் வடிக்க வச்சுட்டண்டி. ஆமாம், என்னை என்ன சொல்லிக் கூப்பிட்ட?
😊😊😊😊😊
வழக்கமா உன்ன கனகா-ன்னுதானே கூப்பிடுவேன். அதுதானே உம் பேரு.
😊😊😊😊😊
லக்னோ போனதிலிருந்து நான் கனகா இல்லை. நடராஜன்-னு பேரு வச்சவரு வடக்கே வந்தா நட்ராஜ். தனராஜு வடக்கே மாற்றல் ஆகி வந்தா தன்ராஜ்-னு மாத்திக்கிறாரு. கனகா மட்டும் கனகா-வா இருந்த இந்திக்காரங்க மதிக்கமாட்டாங்க. அதானாலே நான் 'கன்கா' ஆகிட்டேன். என்னை இனிமேல் யாராவது கனகா-ன்னு கூப்பிட்டா அவுங்க கைய முறிச்சிடுவேன். உனக்கும்தாண்டி இந்த எச்சரிக்கை.
😊😊😊😊😊
சரிடீ கன..கா. இல்ல இல்ல கன்கா வர்றண்டி.
😊😊😊😊😊😊
போயிட்டு வாடி பொன்மயில்.

■■■■■■■■■■■■■■■■■■■■■■■◆◆■■◆■■■■■◆◆◆◆◆◆◆◆◆■■■■■■■■■■ சிரிக்க அல்ல. சிந்திக்க.

எழுதியவர் : மலர் (19-Sep-17, 12:21 am)
பார்வை : 256

மேலே