பள்ளிக் கல்லூரியில் ஆண் பெண் ஈர்ப்பு, நட்பு, காதல் சரிதானா
எந்தக் குடும்பத்திலும் பெற்றோரின் முக்கிய நோக்கம் தங்களின் பிள்ளைகள் படித்துப், பட்டம் பெற்று, கல்விமான்களாகி நல்ல உத்தியோகத்தில் இருக்க வேண்டும் என்பதே. அதற்காகத் தமது உழைப்பில் பெரும் பகுதியை பிள்ளைகளின் கல்விக்காக செலவு செய்கிறார்கள். அதை பிள்ளைகள் உணர்ந்து படிக்கிறார்களா என்பது கேள்விக் குறி
சாதியையும் குடும்த்தின் மதிப்பையும் முக்கியமாக கருததும் கலாச்சாரத்தில் இருந்து வரும் கிராமப்புற மாணவ மாணவிகள் பல இன மக்கள் வாழும் நகர்களில் உள்ள கல்லூரிகளில் கல்வி பயிலும் போது பல் இன மாணவ மாணவிகளைச் சந்திக்கும் சூழ் நிலை உருவாகிறது. அதனால் அவர்களின் கலாச்சாரத்தோடு இணைந்து போக வேண்டிய இருக்கிறது. கிராமத்துப் பள்ளிகூடக் காதலுக்கும், நகரபுறக் காதலுக்கும் பல வேறுபாடுகள் உண்டு. கிராமப்புரக் காதலில் சாதி, இயற்கை, கிராமத்தின் பஞ்சாயத்து நீதி போன்றவை வாழ்க்கையில் முக்கிய பங்கு வகிக்கின்றன.. நகர்புறக் காதலுக்கு சாதி. மதம். மொழி, கலாச்சாரம் ஆகியவை முக்கியமில்லை. ஆடை மாற்றுவது போன்று காதலர்களையும். காதலிகளையும் மாற்றுவார்கள். பீச், பார்க், சினிமா. உணவகம், `மக்களின் நடமாட்டம் குறைந்த இடங்களை. சந்திக்கும் இடங்களாக காதலர்கள் தேர்ந்து எடுப்பார்கள்..
கல்லூரிப் படிப்பின் போது வளரும் காதல் அனேகமாக. நீண்ட காலம் நீடிப்பதில்லை. காதலுக்குப் போட்டிகள் இருப்பதுண்டு. ஒரு மாணவி அல்லது ஓரு மாணவன் படிப்பில் ஏற்றப்படும் சந்தேகங்களை தீர்க்கும் போதோ, அல்லது ஓரு திறமையை இருவரில் ஒருவரிடம் காணும் போதோ நட்பு ஏற்பட்டு காதலாக மாறுகிறது. சுற்றுலாப் பயணம் செய்யும் போது நெருங்கிய உறவு ஏற்பட்டு காதலாகிறது. அழகினால் கவரப்படுவதாலோ அல்லது இணைந்து ஒரு கலை நிகழ்ச்சயில் ஈடுபடும்போதோ காதல் உருவாகிறது. நண்பனின் சகோதரியையோ அல்லது சினேகிதியின் சகோதரனையோ அடிக்கடி சந்திக்கும் போது ஈர்ப்பு’ ஏற்பட்டு காதலாக மாறுவதும் உண்டு இக் காதல் அனேகமாக திருமணத்தில் முடிவதில்லை. கல்லூரி சட்ட திட்டங்களை மீறி காதலித்தால் கல்லூரியில் இருந்து வெளியேற வேண்டி வரலாம்
மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் இடையே காதல் உருவாகலாம் . இது கிராமத்தில் நடப்பது அறிது.
பள்ளிக்கூடக் காதல்கள் சில சமயம் வன்முறையில் முடிவடைவதும்’உண்டு. காதலில் முக்கிய கவனம் செலுத்துவதால் படிப்பில் கோட்டை விட்டவர்களும் உண்டு. .தாம் கல்லூரிக்கு வருவது கல்விக்காகவே காதல் செய்வதுக்கு அல்ல என்பதை மாணவ மாணவிகள் உணரவேண்டும் நட்பு வேறு, காதல் வேறு.
ஒவ்வோறு உடலுக்கும் இயற்கையான அதிர்வெண் உண்டு. இரு உடல்களின் அதிர்வெண்கள்; ஒத்துப் போகும் போது இரு மனங்கள் ஒன்றாகிறது. ஒருவர் மனதை ஒருவர் இலகுவில் அறிந்து கொள்கிறர்கள். இதை தற்காலத்து மாணவ மாணவிகள் தங்கள் மொழியில் “கெமிஸ்ட்ரி” என்று சொல்வார்கள். ஒரு மாணவனுக்கும் மாணவிக்கும் இடையே கெமிஸ்ட்ரி ஓத்துப் போனால் காதலாய்; இலகுவில் உதயமாகிறது. இது உதயமாக முகநூல். டுவிட்டர். மின் அஞ்சல், மொபைல் போன்ற தொழில் நுட்பச் சேவை துணை போகிறது. திருமணத்தின் போது ஜாதகப் பொருத்தம் பார்க்கும்’ போது கணவன் மனைவிக்கிடையில் இனம் புரியாத கவர்ச்சி ஏற்பட அது ஆயுட்காலம் முழுதும் நிலைத்திருக்க உதவும் பொருத்தம். வசியப் பொருத்தம் என்று உண்டு.
தொழில் நுட்பம் முன்னேறாத கிராமத்தில், காதலுக்கு காதல் கடிதம் பெரிதும்,
உதவுகிறது. பேச்சினால் கவரப்பட்டு காதலித்தவர்களும் உண்டு. பேனா நண்பர்கள் காலப் போக்கில் காதலர்களாக மாறுவதும் உண்டு. இவை கடல் கடந்த காதலாகவும் இருக்கலாம்
பள்ளிக் காதல் சில சமயங்களில் விசித்திரமான காதலாக அமையலாம். சட்டத்தினால் ஏற்கப்படாத ஒரே பால் காதலாக இருப்பதும் உண்டு. சகோதரங்களுக்கு இடையே எற்படும் காதுலும் பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் இடையே ஏற்படும் முறையற்ற காதல்கள் மிகக் குறைவு. இது சட்டப்படி பல நாடுகளில் குற்றம். இதை ஆங்கிலத்தில் incest என்பார்கள்
இத்தகைய காதல் கிராமத்தில் அரிது காரணம் மரபு வழி வந்த கிராமத்துக் கலாச்சாரத்தில் இத்தகைய காதலுக்கு இடமில்லை.
பள்ளிக் காதல் சில சமயங்களில் தற்கொலையிலும், கொலையிலும் போய்’ முடிவதுண்டு. இதற்கு நுங்கம்பாக்கம் கொலை, உடுமலை கொலை போன்ற பல கொலைகள் போன்றவைகளை குறிப்பிடலாம்.
இதனை ஆணவக் கொலை என்பர். இது சாதியோடு இணைந்தது. அரசியல், அந்தஸ்து கலந்தது
இளமையில் மாணவ மாணவிகள் உணர்ச்சிப் படுவது அதிகம். புரட்சியான சிந்தனைகள் மனதில் தோன்றும். வாழ்க்கை அனுபவம் குறைவு என்பதால் அதன் விளைவுகளைப் பற்றி சிந்திப்பதில்லை சிலர் தம் காதலுக்கு தடை ஏற்படின் அதை ஒரு சவாலாக எடுத்துக் கொள்கிறார்கள், சில சமயத்தில் சில மாணவ மாணவிகள் தங்களை விட வயது கூடிய ஆசிரியர்கள் மேல் காதல் கொண்’டு பின் தங்கள் தவறை உணர்ந்து காதலை மறந்து விடுவதும் உண்டு. பாலு மகேந்திராவின் அழியாத கோலங்கள் என்ற சினிமாப் படம் அழகாக சித்தரித்துள்ளது. இது சிறு பிள்ளை வெளாண்மை வீடு வந்து சேராது போன்றது.
.
சில சமயங்களில் காதல் ஒரு தலைப் பட்சக் காதலாக இருக்கலாம் அதனால் ஏற்படும் விளைவுகள் பாரதூரமனது. தன் காதலை நிராகரிப்பதை ஆண் அவமானமாகக் கருதுகிறான்.. உதாரணம் நுங்கம்பாக்கம் கொலை சம்பவம். .பளிக்கூட காதல். கண்டதும் காதல் போன்றது. நெருங்கி பழக சந்தர்ப்பம் கிடைத்தாலோ அறிமுகத்தின் மூலமோ பள்ளிக்கூட வாழ்வில் தோன்றும்,
அந்தஸ்துக்காக காதல். உயர் சாதி பெண் என்பதால் காதல். திறமைக்குக் காதல். அழகுக்கும் கவர்ச்சிக்கும் காதல். மனம் ஒத்ததால் காதல். பால் உறவு வைக்கும் நோக்கத்தோடு. தோன்றும் காதல். இவை திருமணத்தில்; முடிவது குறைவு
*******
வாழ்க்கையில், இளமை பருவத்தில் "அன்பு" என்பது எப்படி என்பதை உணர்வதில் தனிமையில் விடப்பட்ட இளைஞர்களு, யுவதிகளும் முக்கியத்துவம் காட்டுவார்கள் எனவே ஒவ்வொருவரும் மற்றவர்களின் மனதில் எப்போதும் இருக்கிறார்கள். அவர்கள் தங்கள் நேரத்தை தொடர்பு கொள்வதில் செலவழித்து தமது தனிமையை போக்க விரும்புவார்கள் – இதற்காக தெரிந்தெடுத்த நண்பர்களோடு பழக நேரத்தை ஒதுக்கி வைக்கிறர்கள். இந்த ஒன்றிணைந்த உறவினால், ஒவ்வொருவரும் மற்றொன்றின் பகுதியை உணர்கிறார்கள், எனவே இருவரும் நுட்பமான தனிப்பட்ட சிக்னல்களை விழிப்புடன் இருப்பதோடு, அவர்களின் உறவில் ஊடல் இருக்கும். அதன் பின் கூடல்.
ஒரு அவநம்பிக்கையான இணைப்பு ஆரம்பத்தில் இருக்கலாம். ஒருவர் மனதை ஒருவர் நன்கு அறிந்த பின் அந்த அவநம்பிக்கை மறைத்து விடும் - பொறாமை, பிடிவாதம், அகங்காரம், மற்றவர் கருத்தை’ ஏற்காமை போன்றவற்றினால் காதலில் மோதல்கள் உருவாகி வலிமையான காதலாகிறது இது போன்ற சிறு சிறு ஊடல்கள் பள்ளிக் காதலின் போது ஏற்படுவது சகஜம்..
.
பெற்றோர் தங்கள் மகனின் அல்லது மகளின் பள்ளிக் காதல் விசயத்தை கையாள்வதில் சிக்கல் இருப்பதைப் புரிந்து கொள்வதற்காக இந்த பதட்டங்களை கவனத்தில் கொள்வது அவசியம். பெற்றோருக்கு சமூகத்தில் குடும்பா மரியாதை முக்கியம். உயர்நிலைப் பள்ளியில் தங்கள் டீனேஜ் காதலில் விழுகையில் பெற்றோர் பொதுவாக கவலைப் படுகிறார்கள். அவர்கள் இளம் பருவத்திலேயே மிகவும் கஷ்டப்படுவதை அவர்கள் விரும்புவதில்லை. ஒருவேளை அவர்களுக்கு பிள்ளைகள்;
மேல் நம்பிக்கை; இல்லாமல் இருக்கலாம்., அல்லது தங்கள் மகன் அல்லது மகளின் தேர்ந்தெடுக்கப்பட்ட காதளை அரை மனதொடு ஒப்புக்கொள்ளலாம். கதலினால் தவறான விளைவுகள் நிகழலாம் என அவர்கள் ஒருவேளை சந்தேகிக்கக்கூடும். காதலினால் பாலியல் ஈடுபாடு அதிகரிக்கும் வாய்ப்புகளுக்கு அவர்கள் ஒருவேளை அஞ்சுகின்றனர். நிச்சயமாக, அவர்கள் உறவைத் தடுக்க முயற்சி செய்யலாம், ஆனால் அவ்வாறு செய்ய அவர்கள் எதிர்ப்பதைத் தடுக்க முயற்சிக்கும் ஆர்வத்தை அவர்கள் தீவிரப்படுத்தலாம்.
பெரும்பாலான சந்தர்ப்பங்களில், அவர்கள் உறவுகளைத் ஆதரிப்பதன் மூலம் இளைஞர்களின் அதிக செல்வாக்கைப் பெறுகிறார்கள், பொதுவாக, பெற்றோர்கள் தங்களுடைய எதிர்ப்பைக் காட்டிக் கொள்ளுவதைவிட ஆதரவைக் காட்டுவதையே பிள்ளைகள் எதிர்பார்ப்பார்கள்
இரக்கம்,பாசம். நட்பு. காதல் இவை நான்கும் தொடர்பு உள்ளவை. உதாரணத்துக்கு இந்த கதையை சற்று நோக்குவோம் . ஒரு கல்லூரியில் புத்தகம் வாங்க கஷ்டப் படுகிறான் ஒரு தலித் இனத்தை சேர்ந்த கத்தோலிக மாணவன். படிப்பில் வெகு கெட்டிக்காரன். அவன் தலித் என்பதால் அவனோடு உயர் சாதி மாணவ மாணவிகள் பழகுவது குறைவு. ஒரு மாணவி மட்டும் அதற்கு விதி விலக்கு அவள், அவன் நிலை கண்டு அவன்மேல் இரக்கப்படுகிறாள். அவள் பண வசதியுள்ள ஒரு தேவர் குல மாணவி. பெற்றோருக்கு சமூகத்தில் பெரும் மதிபுண்டு. தலித் ,மாணவன் மேல் இரக்கப் பு புத்தகம் வாங்க பணம் கொடுத்து உதவுகிறாள். சில சமயம் தன் உணவை அவனோடு அந்த மாணவி பகிர்வாள். அவள் செய்த உதவிக்கு பிரதி உபகாரமாக பாடங்களில் அவளுக்கு உள்ள சந்தேகங்களை அவன் தீர்த்து வைக்கிறான். அவளும் படிப்பில் முன்னேறி பரீட்சையில் சித்தி அடைகிறாள். அவனின் தோற்றம் தன் மறைந்த தம்பி போல் இருப்பதாதல் வான் மேல் உள்ள இரக்கம் பாசமாக மாறுகிறது . அவர்கள் இருவரும் அடிக்கடி சந்தித்து கொள்கிறார்கள். பாசம் நட்பாக பரிணாமம் எடுக்கிறது. காலப் போக்கில் ஒருவர் மனதை ஒருவர் புரிந்து கொள்கிறார்கள். பாசம் அவர்களிடையே காதல் வடிவம் பெறுகிறது. சாதி வேற்றுமையில் ஊறிய சமூகம் அவர்களின் காதலை ஏற்கவில்லை. பிற நாடோன்றுக்கு ஓடிவிடுகிறார்கள்.
நட்புக்கு மதம், மொழி. இனம் என்ற கட்டுபாடு இல்லை. பாசம் உள்ளத்தின் அடிமட்டத்தில் இருந்து உதயமாகிறது, காதலை பொருத்தமட்டில் இளம் வயதில் பள்ளிக் காதல் வரவேற்கக் கூடியதொன்றல்ல.
******