படகில் நானும் அவளும்

அழகான ஆத்தங்கரை
சலசலக்கும் நீரோட்டம்

ஒற்றைப் படகு
மிதக்கும் துடுப்பு

அன்னமாய் நீ
அருகில் நானும்

நாம் மட்டும்
கூடவே நீரும்

நம்மை பார்த்திட
குதிக்கும் மீன்கள்

தொந்தரவு என
விரட்டும் நான்

விளையாட்டு என
ரசிக்கும் நீ

உறுத்துப் பார்த்த
உன் விழிகள்
தோற்றுத்தான் போன
அந்த மீன்கள்

அதன்பின் எட்டிப்
பார்க்க துணியவில்லை
நீருக்கு அவைகளும்
நிலத்துக்கு இவளும்
போதுமென ஒதுங்கிக்கொண்டன

அவள் விழிகள்
என் இளமையில்
நீச்சல் இட்டு
என் இதயத்தின்
ஆழத்தில் உறங்கிட
இடம் தேட
தொடங்குகின்றன

என் விழிகள்
அவள் விழி
பார்வைகள் விழுங்கி
தாகம் தொலைத்து
மூடிக் கொள்கின்றன

ஆற்றோடு மிதக்கும்
சிறு ஓடமென
ஆகாயத்தோடு கலந்த
சிறு மேகமென
ஆண்மையோடு கரைந்த
ஒரு பெண்மையென
ஆதரவாய் தோள்சாய்ந்த
சிறு கொடியென
ஆசையாக என்னைஅவள்
படர தொடங்கினாள்

படகின் ஓட்டத்தில்
அமிழும் நீரென
கடலுக்குள் ஒளிந்துகொண்ட
மாலை கதிரவனென
திடலுக்குள் காணாமல்போன
ஆட்டப் பந்தென
கதிர்வீச்சில் தொலைந்த
காலை பனிஎன
நான் அவளுக்குள்
மூழ்க தொடங்கினேன் ...

எழுதியவர் : சஹாயா சாரல்கள் (20-Sep-17, 2:14 am)
பார்வை : 316

மேலே