உமையாள் திருப்புகழ்
தந்தந் தனதந் தனன தனனதன
தந்தந் தனதந் தனன தனனதன
தந்தந் தனதந் தனன தனனதன - தனதானா
தத்தத் தனதத் தனன தனனதன
தத்தத் தனதத் தனன தனனதன
தத்தத் தனதத் தனன தனனதன - தனதானா !
என்றன் மனதும் நினது திருவடியி
லென்றும் திகழும் அழகு மலரெனவு
மங்கங் கொளிரும் அரிய பெருமைதனை - அடையாதோ ?
அற்பக் கடலுக் கடியி லுளமுமுற
இக்கட் டறவக் கடலி லிருளகல
அக்னிப் பொருளுக் கழுகு மழலைமொழி - அறியாயோ ?
மன்றம் புகழும் அழகு மொழி,கவிதை
நெஞ்சம் நிறையும் வகையில் நினதுபெயர்
பொங்கும் அறிவும் திறனு மெனையணுக - விடுவாயே !
பொற்பட் டணிசிற் றிடையி லுறுநகையும்
பொட்டுத் திரளுட் பொதியு முயிர்நிலையு
மிட்டுக் கயிலைக் கரச னுடலமரு - முமையாளே !
-விவேக்பாரதி