கவிதை திருவிழா - ஏமாறாதே என்னுயிர் நண்பனே
சில விஷமிகள் வெளி வேஷம் போடலாம் உன் வெளிப்படையான பேச்சினைப் பார்த்து...
உன் சர்க்கார் வேலையைப் பார்த்து... யாரும் உன் மனதை பார்க்கவில்லை போலும் ...
உன் மனவலியைத் தெரிந்து கொண்டு உன் வலிகளோடு விளையாடலாம் ...
பல கட்டங்களை உன் வாழ்வில் தாண்டி வந்த உனக்கு இந்த சிறு கல்லை ஏன் தாண்ட தயங்குகிறாய் என தோன்றவில்லை...
உன் வலி தெரிந்து மருந்து போடுவதுபோல் இருந்தாலும் நஞ்சையே கொடுக்கின்றனர்...
பழகிய குறுகிய காலத்திலேயே நண்பர்கள் ஆக முடியும் ஆனால் வாழ்க்கையையே ஒப்படைக்கும் அளவுக்கு சென்றுவிட்டு பின்
ஏமாறக்கூடாது...
என் ஆவல் எல்லாம் நீ ஏமாந்துவிடக்கூடாது என்பது மட்டுமே..
இதை நான் சொன்னால் நான் யார் உனக்கென்று கேட்டு என்னை நோகடிக்கிறாய்...
எதிர்காலத்தை சற்றும் யோசிக்காமல் தற்காலிக சுகத்தை நோக்கி நீ செல்கிறாய் ...
அங்கு மாட்டிக்கொள்ளமல் மீண்டு வந்துவிடுடா எங்களிடமே...
உன்னை உரிய இடமின்றி வேறு எங்கயோ தாரை வார்த்து கொடுக்க மனம் மறுக்கிறது..
நீ எங்கும் விழுந்து விடாமலிருக்க நாங்கள் இருக்கின்றோம் ஆறுதல் தேவைப்பட்டால் நாங்கள் தருகிறோம்...
காற்றுள்ள போதே தூற்றிக்கொள்ளடா ...
உனக்கு தேவை படும்போது நாங்கள் இல்லாமல் கூட போய்விடலாம்...
ஆறுதலாக பேசுகிறார்கள் என்று யாரையும் நம்பிவிடாதே...
முன்னர் இருந்தது போலவே எங்களிடம் திரும்ப வந்துவிடுவாய் என காத்துகொண்டு இருக்கிறோம்...
எங்களை வெகுகாலம் காக்க வைக்காதேடா!!!