ஆதலால் கண்ணீராக மாற்றி
நம்மிடையே நடந்த அனுபவங்கள் !
நாம் பரிமாறிய பார்வைகள் !
இதழ்கள் பரிமாறிய முத்தங்கள் !
நம் உரையாடல்கள் !
நம் ஊடல்கள்
நம் கூடல்கள் !
நம் காதலின் சுவாரசியங்கள் !
அத்தனையும் கவிதையாய் மாற்ற
தெரிந்த எனக்கு !
நீ தந்த இந்த "வலியின் " கொடுமையை
கவிதையை மாற்ற தெரியவில்லை !
ஆதலால் கண்ணீராக மாற்றி அழுது
தீர்த்துக்கொள்கிறேன் !