காதல் மாயை
![](https://eluthu.com/images/loading.gif)
மயக்கமென்னும் மாய வலையும்
காதலென்னும் இதய இறுக்கமும்
விரல்கோர்த்து இணைகையில்
பிறப்பதோர் வாழ்வின் தருணம்..!
அகலாது தொடரும் நிழலின் நிஜமும்
நிகழாது போகும் நிஜத்தின் வாசமும்
பார்வைகள் பதிக்கையில்
இருப்பதோர் கண்ணீர்த்துளி மீதம்..!!