அன்புள்ள அப்பாவிற்கு

பூவிற்கு பிறந்து
பூவை மணந்து
பூவையே பெற்ரெடுத்த
புண்ணியவனே !!
உன் அழகிய பூந்தோட்டத்தில் ,
சிறு புயலும்
புகாமல் பாதுகாத்து ,
கண் இமைப்போல்
கண்காணித்து காத்து நின்றாய் !!!
நீ விழித்து
எங்களை உறங்க வைத்தாய் !!!
நீ பசித்து
எங்களை புசிக்க வைத்தாய் !!!
நீ விழுந்து
எங்களை நிற்க வைத்தாய் !!!
நீ அடைந்த
இன்னல்கள் சிறிதும்
எம்மை அண்டிடாமல்
பாதுகாத்தாயே !!!
என்றோ .....
நாங்கள் செய்த புண்ணியத்தின்
பலனாய் கிடைத்தாய் ,
நீ - எமக்கு
தந்தையாய் !!!
உன் தியாக கடமைக்கு
நன்றி கடன் செலுத்த
ஏழு ஜென்ம வாழ்வும்
போதாது எமக்கு !!!!
அப்பா ......
மீண்டும் ,
ஒரு பிறவி பெரின் -அதில்
நீ எமக்கு புதல்வனாகும்
வரம் வேண்டும் !!!.....

எழுதியவர் : ப.பூமா (23-Sep-17, 1:10 pm)
Tanglish : anbulla appavirku
பார்வை : 2003

மேலே