நினைத்தாலே இனிக்கும்
....நினைத்தாலே இனிக்கும்....
அகவரிகளில் இணைந்து
புதுக்கவிகளாய் உலா வந்தோம்
இன்றோ நட்பென்னும் நிழலில்
வெவ்வேறு மரக்கிளைகளின்
கீழே தனித்தனியே
இளைப்பாறுகின்றோம்....
செல்லமான சேட்டைகள்
கொஞ்சலான குறும்புகள்
பகிர்ந்துண்ணும்
உணவு வேளைகள்...
கரம் கோர்த்து கலாட்டா
செய்யும் அழகான தருணங்கள்
அத்தனை நினைவுகளையும்
நீங்காமல் மனதினுள்
மலரச் செய்கிறது
பள்ளிக்கால நினைவுகள்...
எங்கோ பிறந்தோம்
நட்பென்னும் சொல்லில்
ஒருவரியில் கவிதையானோம்....
பருவம் கடந்து படிப்பும்
முடிந்து பிரிவென்னும்
போர்வைக்குள் மாட்டிக்
கொண்டாலும்
மனதின் முகவரிகளை
மாற்றாமலே பயணிக்கின்றோம்..
காலங்கள் கடந்தாலும்
நட்பின் தடயங்கள் அழியாது
என்றென்றும் உள்ளத்துள்
உறைந்திருக்கும் அழியாத
கோலங்களாய்..
தித்திக்கும் நினைவலைகளைத்
தந்த நட்பின் வண்ணங்களை
நினைத்தாலே இனிக்கும்...