ஆண் பெண் நட்பு
சமூகத்தின் பார்வைகள்
ஆண் பெண் நட்பு
அதன் நிறம் கருப்பு
அதைத் தவறென பாவிக்கும்
முழக்கங்கள் கொதிப்பு
இது தான் என் தாய்த்திரு நாட்டின்
இன்றைய நடப்பு
பள்ளிப் பருவம் அறிவியல்
சாதனைகள் கொண்டிருக்க
வேண்டிய அவசியமில்லை
அழகான வாழ்விற்கு எங்கள்
சரித்திரம் படைக்கும்
காவியமே போதுமானது
நட்புக்கும் காதலுக்கும் இடையில்
பெரிய பாலமொன்று உள்ளது
அதை அவ்வளவு எளிதில்
எவரும் கடப்பதில்லை
நட்பு நளினமானது
ஒரு ஆணுக்கு பெண்
தாயாக இருப்பதும்
அதே பெண்ணுக்கு அந்த ஆண்
தந்தையாக நின்று
வழிகாட்டுதலும் தான்
என் வஞ்சகமற்ற நட்பு
அதை பாரமாக பார்க்காதே
பாசமாக பார் தோழி
காரணம் ஏதும் இல்லையடி
இருந்தால் அது காமமடி