நாமுத்துக்குமார்

முக்குளித்து கடலில் எடுக்கும்
முத்துக்களைக் கண்டபோது
முதல் முறை வியந்தேன்
அதுவே
முழு உருவமாக உன்னிடத்தில்
கண்டபோது வேர்த்தேன்,


உன் கவிதை வரிகள் எல்லாம்
நீ சிந்தியா கண்ணீரில் விழுந்ததா?
இல்லை
நீ சிந்தித்த சிந்தனைரில் விளைந்ததா?
என்று இன்று வரையும்
சிந்தித்து வருகிறேன்,

எளிமை என்ற
உன் இயல்பு
என்றென்றும் உன்னை
கவரவைத்தது,

வாழ்க்கை சில நேரங்களில்
நான் வாடும் போதெல்லாம்
உன் வரிகளில் வாழத்தொடங்கினேன்
அன்று முதல் ஈர்க்கப்பட்டேன்!
என்னையரியாமல் உன்னை இரசிக்க!!,

ஆசானாக உன்னி எண்ணி
வாழத் தொடங்கிய வேளையில் தான்
ஆண்டவன் அழைத்துக்கொண்டான்
அவனும் என்போல்
உன்மேல் பிரியம் கொண்டானோ
அதனால் தான்
எங்களிடமிருந்து உன்னை
பரித்துக்கொண்டானோ என்று
பல முறை கோபம் கோண்டேன்
அவன் மேல்,

எளிமையான உன் வாழ்வில்
ஒருநாளும் உன்னிடம்
இருந்ததில்லை உறவாக!
இருந்தும் என்றேனும் இருப்பேன்
உன்னாள் விழுந்த விதையாக...!

எழுதியவர் : செந்தமிழ் பிரியன் பிரசாந (24-Sep-17, 7:00 pm)
பார்வை : 395

மேலே