புரட்டாசி மாச குசும்பு சர்க்கஸ் விளையாடும் ஆடு, நீச்சல் செய்யும் கோழியின் அலப்பறைகள்

: புரட்டாசி மாதம் பெருமாளுக்காக அசைவத்திற்கு ஒரு மாதம் லீவு விட்டிருப்போர் அதிகம் என்பதால் வார இறுதிகளில் கசாப்பு கடைகளில் தொங்கும் ஆடு, கோழி உள்ளிட்டவை குதூகலமாக விளையாடி வரும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

புரட்டாசி மாதத்தில் பெருமாளுக்கு கோவிந்தா, கோவிந்தா போடுபவர்கள் ஒரு மாதம் அசைவத்திற்கு லீவு விட்டுவிடுவர். ஆனால் விஞ்ஞான ரீதியில் இதற்கு வேறு அர்த்தம் சொல்லப்படுகிறது. புரட்டாசி மாதம் வெயிலும் காற்றும் குறைந்து மழை ஆரம்பிக்கும் மாதம். ஆனால் பூமி குளிர மழை பெய்யாது.

இத்தனை மாதமாக வெயிலால் சூடாகியிருந்த பூமி மழைநீரை ஈர்த்து வெப்பத்தை குறைக்க ஆரம்பிக்கும். சூட்டை கிளப்பிவிடும் காலம் என்பார்கள்.

இது வெயில் கால வெப்பத்தை காட்டிலும் கெடுதல் தரக்கூடியது. இந்த நேரத்தில் அசைவம் சாப்பிடுவது உடல் சூட்டை அதிகப்படுத்தி உடல் நலத்தை குறைக்கும். வயிறு சம்பந்தமான பிரச்சனையை ஏற்படுத்தும். அதனால் தான் புரட்டாசி மாதம் அசைவத்தை ஒதுக்கினர் நம் முன்னோர்.

கடந்த ஞாயிற்றுக் கிழமை முதல் புரட்டாசி மாதம் தொடங்கிவிட்டதால் பலரது வீடுகளில் சமையல் அறையில் இருந்து சைவ வாடை மட்டுமே வீசுகிறது. இதனை வைத்து பலரும் மீம்ஸ்களையும், ஆடு, கோழிகளின் குறும்பான வீடியோ, புகைப்படங்களையும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.


இருடி ஒரு மாசம் தான்
புரட்டாசி மாதம் என்பதால் கோழி ஒன்று ஜாலியாக தண்ணீர்த் தொட்டியில் நீச்சல் போடும் படத்தை வைத்து மீம்ஸ் பறக்கிறது. இருடி ஒரு மாசம் தான் அப்புறம் பாரு என வெறியோடு பதிவிட்டுள்ளனர்.

ஏன் சோதிக்குறீங்க
ஹோலி இன்னிக்கு மேட்ச்சில் 100 அடிப்பாரா என்று நண்பர் கேட்க, அதற்கு ஏன் சோதிக்கிறீங்கனு வடிவேலு காமெடியை வைத்து இன்னொரு மீம்ஸ் உலா வருகிறது. ஏன்பா சோதிக்கிறீங்க அதான் விராட்னு ஒரு பேரு இருக்குல்ல அப்புறம் ஏன் கோலின்னு நியாபகப்படுத்துறீங்க. அவ்வ்வ்...

புரட்டாசி அதுமா இப்படியா?
காதலியைக் கண்டு உருகும் காதலன் போல பிரியாணியைக் கண்டு உருகும் ஒரு வீடியோவும் முகநூலில் வைரலாகி வருகிறது. சூர்யாவின் முகபாவனைகளோடு சுடச்சுட பிரியாணியை பிரிக்கும் காட்சியை கோர்த்த விட்டு அக்கப்போரு செய்துள்ளனர்.
புரட்டாசி மாச குசும்பு...சர்க்கஸ் விளையாடும் ஆடு, நீச்சல் செய்யும் கோழியின் அலப்பறைகள் சறுக்கி விளையாடும் குட்டி ஆடு
இந்த மீம்ஸ்களையெல்லாம் தூக்கி சாப்பிட்டு விட்டது குட்டி ஆடு ஒன்று சறுக்கி விளையாடும் காட்சி. வாட்ஸ் அப், முகநூலில் இன்று ஒரே நாளில் அதிகம் பகிரப்பட்டுள்ளது இந்த வீடியோ. வீட்டு வாசலில் உள்ள சறுக்கபாதையில் ஆடு ஒன்று சறுக்கி சறுக்கி விளையாடும் காட்சிக்கு புரட்டாசி மாச குசும்புன்னு பலரும் பதில் தட்டிவிட்டு வருகின்றனர்

Gajalakshmi Sr. Sub Editor in our Oneindia Tamil section.

எழுதியவர் : (23-Sep-17, 7:58 pm)
பார்வை : 45

மேலே