நாசா-வின் பொழிந்து வா
வயல்களில் வழியும் நீரிலேத் தப்பி-தன் வலைகளில் ஒழியும் நண்டெனக் காணோம்!
நெற்மணிக் கொண்ட நெடுந்தாள் பயிர்களை-நெற்றி வியா்வை சிந்தி சுமந்து வரும் மங்கையரைக் காணோம்!
ஓடக்கரை அருகே வளர்ந்தோய்ந்த மரத்தூளியில்- தாயவள் தாலாட்டில் உறங்கும் குழந்தையைக் காணோம்!
அள்ளிப் பருகும் ஆற்றுநீர் ஓடகையில் துள்ளி தாவும் மீனினை பிடிக்க ஒற்றைக் காலிலே தவம்புரியும் கொக்கெங்கு காணோம்!
பானையிலே பழையச்சோறு நீர்வடிய பச்சைமிளகாயப் பக்குவப்படுத்திப் பருகும் உழவனெங்கு காணோம்!
ஏர்புகட்ட உழவனின்றி!
ஏழைமக்கள் உணகளின்றி!
இறக்கும் முன்
பெய்யா மழையே பொழிந்து வா!