விழியின் தேடல்

என்
நேர் கொண்ட பார்வை ,
நீ
எதிர் வருவதை கண்டு
தடுமாறிட ......
கால்கள்
செல்லும் பாதை மறந்து ,
நின்ற இடத்திலே
பின்னிட ......
நாணத்தோடு நிமிர்ந்து
உன்னை
நேருக்கு நேர்
பார்த்தான் .....
ஆயிரம் வார்த்தைகள்
நாவில் பிறந்தும் ,
சிறு புன்னகை மட்டுமே
உதடுகள் சிந்தின ......
நீயும் பதிலுக்கு
உதடுகள் பிரியாமல்
புன்னகைத்து செல்ல ......

உன் பாதை
திரும்பும் வரை
பார்த்து கொண்டிருந்தேன் ,
என்னை திரும்பி பார்க்க மாட்டாயா ...
என்று .....!!!!

எழுதியவர் : ப.பூமா (25-Sep-17, 2:05 pm)
Tanglish : vizhieiin thedal
பார்வை : 655

மேலே