முதல் கோணல்

நித்திரை அழைத்த நேரத்தில் நினைவில் நின்ற உன்
நினைவுகளை போர்த்திக்கொள்ள நினைத்தேன்
அதில் நான் மூழ்கிப்போனேன்!

நேரங்கள் கடந்தது நினைவுகள் குவிந்தது
இரவெல்லாம் இனித்தது உன்னுடன் நான் கனவில் இருந்தது!
விழிகள் தேடுது விடியலின் நேரத்தில் வெளிச்சம் தந்த
உன் இதழின் வண்ணத்தை!

கோவத்தில் சுருங்கிய உன் உதடுகள்
எப்போது என்னை பார்த்து சிறிக்குமோ
சிவந்த கண்கள் எப்போது என்னை பார்த்து சிணுகுமோ!

என்னை வெறுத்த உன் வார்த்தைகள் எல்லாம்
என்னை வேதனை தான் செய்கிறது
ஏனதை செய்தாயோ !

உதிர்ந்த என் கண்களின் துளி எல்லாம்
தொடர்ந்தோடியது அது ஆறாக ஆனதடி!

அழைத்த உன் விழிகளும் அணைத்த உன் விரல்களும்
விலகும் வேலைக்கு முன்பே, என்னை நீ
வெறுக்கும் அளவுக்கு காதலித்துதான்
என் முதல் கோணல்!

சந்தானபாரதி.ப
9578277832

எழுதியவர் : சந்தானபாரதி.ப (25-Sep-17, 1:40 pm)
Tanglish : muthal konal
பார்வை : 117

மேலே