நட்சத்திர கூட்டங்கள்
விடுத்தது எதுவுமில்லையென
முடித்து துயில்கிறாய் நீ
உன் கைச்சிறைக்குள் மீண்டும்
ஒரு முறைபூப்பெய்திய நான் !
தொடுத்தது தோற்றதில்லெயென
எடுப்பாகவே தூங்குது
என்னை வென்ற
மன்மதனின் அம்பு விழிகள் ...
எடுத்தது உன் ஆதிக்கம்
தான் என்றாலும்
கொடுத்தது என் அன்பு
என கண் அயர்கிறது
பாவையின் மந்திர
மலர் விழிகள் ...
ஆண்மைக்கும் பெண்மைக்குமான
அதிசயங்கள் எல்லாம்
பூவுலகில் அரங்கேறி
முடித்தும் தூங்காமல்
விழித்தே கிடக்கும்
நட்சத்திர கூட்டங்கள் ..
விழிக்கும் நட்சத்திரத்தின்
விசனம் விசாரிக்க
விரும்பாத விழிகள்
துயில தொடங்கியிருந்தன
நட்சத்திர கூட்டத்தின்
துயரங்கள் அறியாமலே...!!