உன் கையணைப்பில்

உன் கையணைப்பில்
நான் தூங்கும்போது
உணரும் சுகம்

நுழைய முடியாத
தாயின் கருவறை

ஆசை தீராத
தாய்மடி சூடு

தாகம் எடுக்காத
அமுத நீர்

விழிக்கவே தோன்றாத
நீளமான உறக்கம்

அடுத்தது யோசிக்காத
அதிசய மயக்கம்

படுத்ததும் வந்து
ஒட்டிக்கொள்ளும் தூக்கம்

உன் அருகாமையில்
என்னை அறியாமல்
கண் அசர்ந்துபோகும்
அழகிய தருணங்களில்
மெத்தையில் நான்
மீண்டுமொரு குழந்தையாய்
உன் கைதொட்டிலில் தான் !!!

எழுதியவர் : சஹாயா சாரல்கள் (26-Sep-17, 1:39 am)
Tanglish : sugam sugam
பார்வை : 452

மேலே