எங்கிருந்தோ வந்து
இந்த உலகத்தில்
நான் அதிகம்
நேசிக்கும் ஜீவனும்
நீ தான் ....
......
இந்த உலகிலே
நான் அதிகம்
வெறுக்கும் ஜீவனும்
நீ தான் ....
எங்கிருந்தோ வந்து
என்னை அறியாமல்
எனக்குள் ஊடுருவி
என்னவளாக என்
அகத்தில் நுழைந்து
என் உலகத்தின்
அத்தனை பக்கத்தின்
அடையாளம் ஆகி
பின்னொரு நாள்
என் உலகமாக
மாறி இருந்தாய்
நீ ....