உன்னைத் தேடும் உயிரோசை
திரண்டு வந்த மேகம்
பொழியாமல்
திரும்பிச் சொல்வதைப் போல
நேருக்கு நேர் வந்து
என்னோடு
பேசாமல் போகிறாய்
மௌன முட்கள்
பரவிக் கிடக்கும்
வானாந்திரத்தில்
உன் தவிர்ப்பு யானையை விட்டு
என்னை
மிதிக்கச் செய்கிறாய்
வாசப் பூக்களை
கூடைக்குள் வைத்துக் கொண்டு
நெருப்புத் துண்டுகளை
பரிசளிக்கிறாய்
உன் கனவு முழுக்க
என்னை நிரப்பிச் சிலிர்க்கும் நீ
மறந்து விட்டதாய்
சொல்லிக் கொள்கிறாய்
பரவாயில்லை
வெற்றிடம் தாண்டி
உன் அழைப்பு வரும் வேளை
நான்
கண்ணுக்கெட்டா தூரத்தில்
கரைந்து போயிருக்கலாம்
அப்போதும்
நான் உச்சரித்த
உன் பெயரின் ஒலிவடிவம்
உன்னை
தேடிக்கொண்டுதானிருக்கும் !
@இளவெண்மணியன்

