திரும்பி வர

வெய்யில் காலத்துக்கு
பிந்திய மழைக்காலம்
வராதாவென காத்திருக்கிறது
வாடிக்கிடக்கும் நிலம்...

சுடும் சுடர்விழி
அவள் கோபம்
தணிந்து திரும்பிவர
வாடி தான்
காத்துகிடக்கும்
என்னை போல

என்று முத்தமிடுமோ
அந்த மழைத்துளி பூமியை
என்று சத்தமிடுமோ
அவள் உதட்டு சங்கீதம் எனில்

என்று குளிர்விக்குமோ
அந்த மழைச்சாரல்
இந்த மண்ணில்
என்று குவியுமோ
அந்த இதழஇலைகள்
என் இதழில் ...

என்று கரையுமோ இந்த
மண்துகள்பாரம் மழையில்
என்று குறையுமோ எந்தன்
மனபாரம் உன்னஅணைப்பில் !

காத்துக்கிடக்கிறேன் கண்மணி

எழுதியவர் : சஹாயா சாரல்கள் (27-Sep-17, 6:31 pm)
Tanglish : thirumpi vara
பார்வை : 1341

மேலே