கனவை நனவாக்கிய பந்தமே

நீயே எந்தன் உலகமென்று நான் வாழ,
நானே உந்தன் உலகமென்று நீ வாழ,
நாமே உலகமென்று கைகளில் தவழ்கிறான் நம் தங்கக்கட்டி...
உயிருள்ளவரை உங்களிருவரையும் என் கண்களாய், கண் இமைகள் போலிருந்து பாதுகாப்பேன்...

பற்றில்லா என் வாழ்வில் பற்று கொள்ள பாவை நீ வந்தாய் பதுமையாய்...
சூறைக்காற்றில் சாய்ந்து போகும் ஆலமரமென்னைத் தூணாய் தாங்கும் விழுது தந்ததென்னைப் பலப்படுத்தினாய் அன்பே...

எந்தன் வாழ்வில் புதுமை செய்த பதுமை,
உன் கண்ணிமையின் சிமிட்டல் போதும்...
என்னை இயக்கும் சக்தி தரும்...

சிற்றழகியாக இருந்த நீ தாய்மை அடைந்தபின் காட்சி தருகிறாய் பெரழகியாய்...
அர்த்தமில்லா என் வாழ்வில் அர்த்தமாக நீ வந்தாய்...

தனிமரமென்னை தோப்பாக்கும் வரம் தந்தவளே நீயே கடவுள் எனக்கு தந்த வரம்...
எண்ணற்ற நன்றிகள் சொல்கிறேன் என் வாய் வலிக்க அந்த கடவுளுக்கு...

என் வாழ்வின் கீதமே!
உன்னோடு வாழ்வதென்று எனக்கு ஆனந்தமே!
காதலின் பரிசுத்தமே!
கனவை நனவாக்கிய பந்தமே!
வாழ்நாள் முழுவதும் துணை வரும் நீயே என் நிரந்தர சொந்தமே!

( இது ஒரு கற்பனை தான். என வருங்கால மனைவிக்காக ஒரு சின்ன கவிதை.. )

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (27-Sep-17, 7:08 pm)
பார்வை : 4090

மேலே