தமிழே என் காதலி
இருள் சூழ்ந்த மாலைப்பொழுது!
வெட்கத்தில் எட்டிப்பார்க்கும் நிலவு!
தவிர்க்க முடியாத மழைச்சாரல்!
கூடவே மனதைத் தொட்டுச்செல்லும்,
இதமான காற்று!
மலரும் மண்ணின் வாசனை!
அமைதி நிறைந்த சுற்றுச்சூழல்!
தனிமையில் நான்,
என் நினைவினில் நீ.....
எனதுயிர் தமிழ் அழகியே!!!