எழுத்தின் வலிமை
பேனா முனைக்கும் காகிதத்துக்குமிடையில் நடைபெறும் காதல் உரையாடலில் எழுத்துக்கள் ஓர் மொழி..
எழுத்துக்கள் ஒன்றன் பின் ஒன்றாக பயணம் செய்கையில் கவி வரிகள் உயிர் பெறுகின்றன....
ஊமையின் மொழி அவன் இதழில் அல்ல விரல் நுனிகளில் உள்ளது எழுத்து எனும் வடிவில்....
வைரமுத்து வையகம் புகழ் பெறச்செய்தது அவர் எழுத்து...
அகிலத்தில் அறிமுகம்இல்லாதவனுக்கு அடையாளம் கொடுப்பதும் எழுத்து...
கற்பனைகளை காவியமாய் படைக்க கருவி எழுத்தே...
காதலர்களின் மௌன உரையாடல்களின் போது மொழித்தரகரும் இவ் எழுத்தே..
அகிலம் திரும்பி பார்க்க ஆரவாரமாய் பேசி ஆர்ப்பாடம் செய்ய வேண்டிய அவசியம்இல்லை.
அர்த்தமாய் எழுத்துக்களினால் கோலமிட்டால் போதும் உன் அருமை அகிலம்அறிய...
எழுத்துக்களால் எழுச்சி பெறு ..
எழில் அடைவாய்...