அடிமை இந்தியா எழுச்சி பெறவே

நம்மை அடக்க நினைப்பவரை அடக்கியே வைப்போம் அவர் ஒரு நாட்டின் அரசனாக இருந்தாலும்...

நம்மில் அடக்கமுள்ளவரை அடக்க வருவோர் அஞ்சி நடுங்கி ஓட வைக்கும் ரௌத்திர உணர்ச்சி திரண்டு ஒருமுகமாகி தேவைப்படும் போது தாக்கும் ஆயுதமாய், சக்தியாய் மாறி எதிர் நிற்பது எப்பெரிய சக்தியானாலும் தகர்க்கும் வல்லமையோடு உருவெடுக்கிறது ஆத்மாவின் அனுபந்தமாய்...

தனிமனிதனை அழித்து உலகமென்றும் நிம்மதி பெறாது அலைகடலாய்...

எங்கோ இருக்கும் ஒருவன் அரசியல் தலைவனென்ற பெயரில், பதவி, அதிகாரம், பண பலம் என்ற ஆயுதங்களால் சிறிதும் நியாயமில்லாமல் நம்மை அடக்கி அதிக்கம் செலுத்துகிறான் நாடென்றும், தேசபக்தியென்றும் கட்டுக்கதைகளால்...

தான் மட்டுமே நிரந்தரமாக ஆதிக்கம் செலுத்த வேண்டுமென்றும், தனக்குத் தெரியாமல் யாரும் சிறுநீர்கூட கழிக்கக்கூடாதென்றும் நினைக்கும் அவனது எண்ணங்களில் பொங்கிவழியும் ஆதிக்க வெறிகளின் தாக்கம் சட்டத்திட்டங்கள் என்று பாயும் நாட்டில் சுதந்திரம் பற்றி பேசும் அடிமைகளாய் நீங்களும், நானும் இந்தியர்களென்று போலி மயக்கத்தில் சிந்திக்காமலே அடங்கிப்போகிறோம் ஆணவ அரசியல்வாதிகளுக்கு...

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (30-Sep-17, 12:55 pm)
பார்வை : 1105

மேலே