மண்ணுக்குள்ளே

கண்ணுக்குள்ளே
சுமந்தேன்.....
மண்ணுக்குள்ளே
போகும்வரை
சுமப்பேன்.....!!

இமை கூட
சுமைதானடி
இணையாமல்
நகரும்
ஒவ்வொரு
கணமும்.......!!

உன்னைக் கொல்லும்
தனிமைதான்
என்னையும்
கொல்லுது.....ஆனாலும்
உள்ளம்
ஏதேதோ
உன்னுயிர் சுமந்தே
சுகமானது.....!!

கவி படிக்கும்
கவிஞர்
எல்லாம்......வீழ்வதில்லை
காதலில்.....உன்னாலே
உன்
கண்ணாலே
கவியெழுத நானும்
வந்தேன்.....!!

இதயம்
துடிப்பது
இயல்புதான்.....
உனக்காக
மட்டுமே
துடிப்பேன்
என்று.....மாறியதுதான்
காதலின்
பரிணாமம்
என்றானது......!!

ஓசை இன்றி
ஒவ்வொரு
இரவும்
கண்ணீரின்
காணிக்கை......
உன்னோடு
சேர்ந்திடவே
ஆண்டவனிடம்
கோரிக்கை......!!!

புரியாத
பாசத்தை
பிரிவு
தெளியவைத்தது.....
புரிந்தவரும்
பிரிந்தவரும்
புவியில்
பலகோடி......!!!

விழியில்
கதை
எழுதி
மனதில்
படித்தேன்......
அன்பே
இது
மெய்யா....?
என் அன்பே
இது
பொய்யா....?
புரியாத
கோலத்தில்
வேண்டாத
புள்ளியா
நான்.....???????

வெள்ளி
மலரே.....
புள்ளி
மானே......
விடி வெள்ளியின்
அழகுதான்
நீ.....நீதான்
அழகு......!!!

கண்ணைக்கட்டி
விட்டாலும்
உன்னைக்காட்டும்
உள்ளம்தான்
உன்னை
சுமக்கிறேன்.....சுமை
என்று அல்ல
சுகமாக......!!!!

முத்தமிழே
உன்னை
முத்தமிடும்
அழகு
அழகுதான்.....
ஆசையாய்
உன்னை
அணைக்கிறேன்......
ஆடிக்காற்றில்
அணைந்துவிடாத
அகல்விளக்காக......!!!!

எழுதியவர் : thampu (2-Oct-17, 4:23 am)
பார்வை : 116

மேலே