எங்கே இருக்கிறாய்

நீ
என்னை அனைத்து தொலைத்தொடர்பு
சாதனங்களிலிருந்தும் தவிர்த்துவிட்டு
என்னைப் போலவே
தேடித் தேடி தொலைப்பாய்
தோண்டி தோண்டி புதைப்பாய்
என நான் அறிவேன்...
என்னை தேடிக்கொண்டே இருக்காதே
தேடி அடைந்துவிடு
தேடவைத்துக் கொண்டே இருக்காதே
கிடைத்துவிடு
ஜெகதீஷ்