நண்பன்

கண்ணில் தூசி விழுந்தால் எடுக்க துடிக்கும் கண்ணீர் போல
குளிர் அடித்தால் கதகதப்பை கொடுக்க குறுகும் தேகம் போல
என் வாழ்வில் இடி விழுந்தால் அழும் மேகம் போல
நான் கொடி கட்டி பறக்க என்னை உயாத்திவிடும் கம்பம் போல
என் நம்பிக்கை மிருகமாயின் அவன் எனக்குள் இருக்கும் சிங்கம் போல
நான் கோபம் கொண்டாலும் என்னை பார்த்து சிரிக்கும் பொம்மை போல
அன்பு தேனை சேர்த்து அளவில்லாமல் கொடுப்பதில் அவன் தேனீ போல
என் உடலை வலி தொடும் போது துடித்திடுவான் அவன் மேனி போல
மொத்தத்தில் அவன் நினைவுகளில் ஓடும் என் உதிரம் உரைந்தாலும் எனக்காக துடிக்கும் இதய தோழன் அவன் .

எழுதியவர் : ராஜேஷ் (1-Oct-17, 9:40 pm)
Tanglish : nanban
பார்வை : 1194

மேலே