பறவையின் மனசு

பசித்தால் மட்டுமே -
பறந்து சென்று உணவை தேடும் !

உயர பறந்தாலும் கர்வமில்லை !
உறவை பிரிந்து இருந்ததுமில்லை !
வழி மறந்து போவதுமில்லை !
வருமானம் தேடி சேர்த்ததுமில்லை !

வட்டத்தை போட்டு வாழ்ந்ததுமில்லை !
வாழ்வை தொலைத்து அலைந்ததுமில்லை !
வேடனை கண்டு பயந்ததுமில்லை !
வேதனை என்று ஓய்ந்ததுமில்லை !

விடியலை தேடி வீறுகொள்ளும் !
விதியை வென்று வீடு திரும்பும் !

எழுதியவர் : H ஹாஜா மொஹினுதீன் (2-Oct-17, 10:49 am)
Tanglish : paravaiyin manasu
பார்வை : 104

மேலே