முதிரா கன்னி 6

போலிஸ் ஸ்டேஷன். ஒரு வித அமைதியில் ஆழ்ந்திருந்தது. அந்த அமைதியே அது போலிஸ் ஸ்டேஷன் தானா என்ற சந்தேகத்தை எழுப்பியது. வெளியில் வண்டி எதுவும் காணவில்லை. உள்ளே நுழைந்தோம். சேரில் அமர்ந்தபடியே கண்களை மூடியிருந்தார். வெறும் பனியன் மட்டும் அணிந்திருந்தார். தொந்தி சற்றே பெருத்திருந்தது. அனேகமாக ஏட்டாகத்தான் இருக்க வேண்டும்.

"ஸார்... ஸார்..."

சத்தம் கேட்டு மெதுவாக கண் விழித்தார்.

"யாருப்பா நீங்க... என்ன வேணும்...?"

"ஸார்... இன்ஸ்பெக்டர் இல்லையா...?"

"அவர் இல்ல.ஆனா அவர் வர்ற நேரம் தான்..
ஏன் அவர்கிட்டதான் சொல்லுவீங்களா, எங்க கிட்ட யெல்லாம் சொல்லமாட்டிங்களோ... "அதட்டலாய் கேட்டார்.

சொல்ல வாயெடுத்தோம்... நல்ல வேலையா இன்ஸ்பெக்டரே வந்துட்டார்.

"என்னய்யா... என்ன பண்ணிட்டு இருக்கீங்க... யாரு இவங்க..."

"இப்ப தான் ஸார் வந்தாங்க... ஏதோ உங்ககிட்ட சொல்லனும்மாம்..."

"என்னப்பா, யாரு நீங்க...? எதுக்கு வந்தீங்க, சொல்லுங்க..."

ஒரு ரெண்டு நிமிடங்கள் செலவழித்து நடந்ததை சொன்னோம்.

"சரி அந்த ஆளோட போன் நம்பர் இருக்குதா...?"

"இருக்கு ஸார்... அந்த பொண்ணுதான் கொடுத்துச்சு... இந்த நம்பர் தான் ஸார்..."

"சரி... சரி... மத்தத நான் பாத்துக்குறேன். நீங்க கெளம்புங்க. இந்த கான்ஸ்டபிள கூட்டிப் போய் உங்க அட்ரஸ்ச மட்டும் காட்டிடுங்க..."

"யோவ்... நீ என்ன பண்ணுற இந்த நம்பர டெலிபோன் டிபார்ட்மெண்ட்ல கொடுத்து ட் ரேஸ் அவுட் பண்ண சொல்லிடு.
...... ...... ......
மணி ஆறு. இருள் சூழ ஆரம்பித்திருந்தது. தெருவிளக்கொன்று கண் சிமிட்ட தொடங்கியிருந்தது. அந்த தெருவில் ஆள் நடமாட்டம் குறைவாகவே இருந்தது.

"ஸார்... நாங்க அந்த பொண்ணு இருக்கற வீட்டுக்கு பக்கத்துல இருக்கற கடையில நிக்கிறோம் ஸார்..." போலிஸ் கான்ஸ்டபிள் தகவல் அனுப்பி கொண்டிருந்தார்.

"ஓகே ஸார்... ஓகே ஸார்..."

நேரம் நகர தொடங்கியது....

எழுதியவர் : பனவை பாலா (3-Oct-17, 4:18 pm)
சேர்த்தது : பனவை பாலா
பார்வை : 181

மேலே