பொய்யாகவே இருக்கட்டும்

உனக்கும் எனக்கும் இடையில்
என்ன நிகழ்கிறது
என்னவாகவும் இருக்கட்டும்
சுகமாகவே இருக்கிறது

நீ எனக்குள் என்ன
மாயம் செய்கிறாய்
என்னவாகவும் இருக்கட்டும்
அழகாகவே இருக்கிறது

நீ எனக்குள் என்ன
புதிர்கள் போடுகிறாய்
என்னவாகவும் இருக்கட்டும்
சுவாரசசியமாகவே இருக்கிறது

நீ எங்கோ இருந்துகொண்டு
என்னை ஆட்டிவைக்கிறாய்
எதுவாகவும் இருக்கட்டும்
அரங்கேற தொடங்குகிறது
இளமையின் நடனங்கள்

நீ எங்கோ இருந்துகொண்டு
என்னை மீட்டுகிறாய்
எதுவாகவும் இருக்கட்டும்
இசைக்கத் தொடங்குகிறது
நாணத்தின் நரம்புகள்


என் எதிரே இல்லாத
உன் முகத்தில் மயக்கும் விழிகாலை தேடுகிறேன்
என் அருகில் இல்லாத
உன் தேகத்தில் இறங்கும் உளிஎன ஆகிறேன்

என் காதுகள் வந்துசேராத
உன் குரலோசையை மயங்கி கேட்க மனம் ஏங்குகிறேன்
உன் இதயம் உள்வாங்காத
என் காதலை மெல்ல முனங்கி தினம் சொல்கிறேன்

உன் விரல்கள் தீண்டாத
என் தேக சிலிர்ப்புகளில் நாணம் கொள்கிறேன்
உன் கரங்கள் கோர்க்காத
என் கனவுகளின் பாதையில் நடை பயிலுகிறேன்

உன் கையணைப்பில் இல்லாத
என் மோகனத்தை தலையணையில் பூட்டி தூங்குகிறேன்
உன் தோள்கள் சாயாத
என் தனிமை வெப்பத்தை நிலவில் குளிர்விக்கிறேன்

உன் முத்தங்கள் ஒட்டாத
என் இதழ்கள் உன் புகைப்படத்தை ஒட்டிக்கொள்கின்றன
உன் விரல்கள் நீவாத
என் நெற்றி ஏனோ ஒற்றை தலைவலியில் துடிக்கின்றன

உன் கைகள் சேராத
என் விரல்கள் கவிதை மட்டும் எழுதி தீர்கின்றன
உன் விழிகள் வாசிக்காத
என் கவிதைகள் உன் முற்றுப்புள்ளியை தேடுகின்றன

உன் விழிப்பார்வை படாத
கோபத்தில் இக்கவிதைகள் முற்றுபெற மறுத்து தொடர்கதையாகின்றன
உன்னை தேடித்தோற்ற ஏமாற்றத்தில்
அந்த கவிதைகள் சோக கீதம் இசைக்க தொடங்குகின்றன

நீ வந்து பாராத
என் எழுத்துக்கள் வீட்டு அலமாரியில் ஒளிந்துகொள்கின்றன
நீ வந்து சேராத
என் நெஞ்சத்தை வந்து சோகங்கள் அடைத்துக் கொள்கின்றன

என் வலி தாங்காத
என் விழியன்நீ என் கனவுகளில் வந்து கண்சிமிட்டுகிறாய்
என் கனவுகளின் கதவுத்தட்டி
என் ஒளியென என் இருட்டறையை அழாகாக்குகிறாய்

என் சோகங்கள் ஓரம்கட்டி
என் இசையென எனக்குள் உன்னை மீட்டுகிறாய்
என் கரங்கள் கோர்த்துதான்
என் அறையில் எனக்கு சொர்கங்கள் காட்டுகிறாய்

எனக்குள் உன்னை செலுத்தித்தான்
என் திரையில் ஆசைகளின் ஓவியங்கள் தீட்டுகிறாய்
நீ வராமல் வரும் கனவுகள்
என் நரையிலும் தினம் நுரையென தொடருமோ

உனக்கும் எனக்கும் இடையில்
என்ன நிகழ்கிறது
என்னவாகவும் இருக்கட்டும்
சுகமாகவே இருக்கிறது

உனக்கும் எனக்கும் இடையில்
என்ன நிகழ்கிறது
பொய்யாகவே இருக்கட்டும்
சுகமாகவே இருக்கிறது

மெய்யாகவிட்டாலும் கூட
பொய்யாகவே இருந்தாலும் கூட
சுகமாவே இருக்கிறது
உன்னோடு நான் வாழும்
கனவுகளின் உலகில்
நான் எப்போதும்
உன் கையணைப்புக்குள் !!!

மெய்யாகவிட்டாலும் கூட
பொய்யாகவே இருந்தாலும் கூட
சுகமாவே இருக்கிறது....

எழுதியவர் : சஹாயா சாரல்கள் (4-Oct-17, 8:50 pm)
பார்வை : 2307

மேலே