நீநான்காதல்

எனை தாக்கிய புயலும் நீ,
எனை தழுவிய தென்றலும் நீ.

எனை சூழ்ந்த சோகம் நீ,
சோக‌ம் தரும் சுக‌மும் நீ.

என் தேக‌ம் நீ,
தேக‌ம் தாங்கும் உயிரும் நீ.

உன் விழியால் எனை சுட்டெரித்த‌வ‌ளும் நீ,
பின் சுண்டியிழுத்த‌வ‌ளும் நீ.

என் காத‌ல் நீ,
காத‌ல் த‌ந்த‌ க‌விதையும் நீ.

என் காதல் மேகம் நீ,
மேகம் தரும் மழையாய் நீ.

ஜாடை பேசும் ஓடை நீ,
ஓடை தரும் குளிர் நீரும் நீ.

என் இதயத்தில் நீ,
என் இதயத்துடிப்பாய் நீ.

எனை கள்வனாக்கியதும் நீ,
கள்வனின் காதலியாய் நீ.

என் மனைவியும் நீ,
என் மழலையாய் நீ.

என் முதலும் நீ,
என் முடிவாய் நீ.

எழுதியவர் : (5-Oct-17, 2:57 pm)
பார்வை : 10540

மேலே