தாண்டு
ஊற்றைத் தோண்டு நீர்வரலாம்
உன்னைத் தோண்டு பேர்வரலாம்
நேற்றைத் தோண்டி என்ன பயன்?
நினைவைத் தோண்டி என்ன பயன்.
காலம் நடக்குது கைவீசி
காதல் நடக்குது பொய்பேசி
நீளம் தாண்டு வெற்றிவரும்
நினைவைத் தாண்டு புத்திவரும்.
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
