புரிகிறதா

என்னைக் கேட்டுப் பெறுவது
என்பது
எளிதாய் இல்லை,
எனக்கு.

அடுத்தவரை
சிரமப்படுத்துவது
ஆகாத செயல்தான்.
என்னை நானே
வதைப்பதை
எப்படிச் சொல்வது?

என் வலியும், காயமும்
ரத்தக் கசிவும்
நீங்கள் அறியாதது.
எதற்கு சொல்கிறேன்
என்பது புரிகிறதா
உங்களுக்கு?

எழுதியவர் : கனவுதாசன் (7-Oct-17, 4:47 pm)
Tanglish : purigirathaa
பார்வை : 82

மேலே