அன்னையின் அமுது

கண் விழிக்கும்
காலை பொழுதினிலே!
மண் மணக்கும்
வாசம் காற்றினிலே!

தாவி பிடிக்கும்
முழு நிலவெல்லாம்!
ஆவி பறக்கும்
இட்லி குண்டாவிலே !

பருப்பினை கடைந்து
பல்சுவை கூட்டி!
பலகாய் கறிகள்இட்டு
பதமுடன் சேர்த்து!
நறுமண மல்லியும்
நலம்தரும் கறிவேப்பிலையும்!
காரமும் சாரமும்
பலவகை மசாலாவும்!
எண்ணையில் பொறிந்திட
கடுகது கவிபாட!
கடைந்து கடைந்து
நாளும் சேர்த்த
அமிர்தமும் தோற்றுப்போகும்
நீ சமைத்த சாம்பாருக்குமுன்!

அரிசியுடன் உளுந்தும்
அன்புடன் கலந்து!
ஆட்டு கல்லில்
அழகுடன் அரைத்து!
புளித்தால் பொங்கும்
சுவைக்க ஏங்கும்!
கல்லில் எண்ணெய்
சீராக சுற்றி !
வட்ட வட்டமாக
ஊற்றிட விரியும்!
பிட்டு தின்றால்
நாவினில் கரையும் !
நாளும் ஆசை
நீசுடும் தோசை!

மணம் கமழும்
மல்லி சட்னி !
மதி மயங்கும்
தக்காளி சட்னி!
தேன் சொரியும்
தேங்காய் சட்னி!
வகை வகையாக
வாரி கொள்ளணுமே!

பலநூறு ஆயிரம் செலவழித்து
பலகடைகள் தேடி உண்டாலும்
அன்னை படைக்கும் அமுதுக்கு
ஈடு இணை இல்லையே!

அமுதூட்டும் அன்னை கரங்களில்
ஆலயம்மேவும் இறைவன் வாழ்கிறான்!

எழுதியவர் : ஜித்து (8-Oct-17, 2:05 pm)
Tanglish : annaiyin amaidhu
பார்வை : 434

மேலே