கண்குளிர்ந்தேன் கண்ணனைக் கண்டு

மண்ணையுண்ட மாயன் மறைந்துகொள்ள வென்மனம்
புண்ணான தென்றாலும் பொன்னடி யோசையிலே
கண்குளிர்ந்தேன் கள்வனைக் கண்டு .

உண்ணாமல் காத்திருந்தேன் ஊர்சுற்றி வந்தானோ
வண்ணமலர் சூடியவன் வாசத்தில் பூத்தேன்யான்
கண்ணாரக் கண்ணனைக் கண்டு.

திண்டாட வைப்பினும் செல்லக் குறும்புகளும்
எண்ணத்தி லென்றும் இனித்திருக்கும் சிங்காரக்
கண்ணனின் பால்முகங் கண்டு.

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (6-Oct-17, 12:18 am)
பார்வை : 135

மேலே