உலகைத் துறந்தவர் யார்

உலகைத் துறந்தவர் யார்?
மரணத்தைத் தழுவும் முன்னே துறந்தவர் யார்??
புவி ஈர்ப்பு விசையில் பற்றி நிற்கும் நீங்கள் உலகைத் துறந்தவரா??
என்னால் ஏற்க முடியாது...

ஆசையைத் துறக்காத வரை உலகைத் துறக்க இயலாது...
உயிர் வாழும் ஆசையைத் துறக்காத வரை உலகைத் துறக்க இயலாது...

உணவை உண்ணும் ஜடத்தால் உலகைத் துறக்க இயலாது...
முகமூடியாய் தாடியை வளர்த்துக் கொண்டு நானொரு துறவியென்பவரெல்லாம் வேஷக்காரரே...
மிக மோசக்காரரே...

பரமாத்மாவின் உண்மையான ஞானம் பெறாது உலகைத்தைத் துறந்தேன்,
செயலைத் துறந்தேன்,
பணத்தைத் துறந்தேன் என்று கூப்பாடு போடும் ஆசிரம சாமியார்களைக் கண்டாலே கல்லெடுத்து அடிக்கத் தோன்றுகிறது இயற்கையின் உந்துதலாய்...

பொருளை வாங்க இடைத்தரகரை நாடும் உலகமே!
வாழ்க்கைத் துணையைத் தேட இடைத்தரகரை நாடும் உலகமே!
பரமாத்மாவைத் தரிசிக்க இடைத்தரகரை நீங்கள் நாடுவது குறுக்குவழியில் கயவர்களின் கால்களில் விழுத்து அடிபணிவதற்குச் சமமே...

உலகைத் துறந்தவனுக்கு எதற்காக ஆசிரமம் தேவைப்படுகிறது?
உயிருள்ள உடலால் எதையும் துறக்க இயலாது ஆசையைத் துறக்காத வரை...

இந்த உலகத்தைத் துறந்ததாய் பொயுரைக்கும் கயவர்களைத் தண்டிக்கக் காலமே விடை கூறும் இயற்கையாக...

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (9-Oct-17, 11:04 pm)
பார்வை : 525

மேலே