முதல்மரியாதையும் அவமரியாதையும்

நம்மை ஏமாற்றும் போலிச்சாமியார்கள் 
நிர்வாணமாய் வந்தால் 
நம் மக்கள் கடவுளின் வாழ்த்து என்கிறார்கள் 
நம்மை காக்கும் 
உண்மை உழவர்கள்கோமணத்துடன் வந்தால் 
வறுமையின் சின்னம் என்கிறார்கள் 
இம்மண் போலிகளுக்கு 
முதல்மரியாதை கொடுக்கிறது 
உண்மைகளுக்கு அவமரியாதை கொடுக்கிறது
இந்நிலை எப்பொழுது மாறுமோ 
உண்மைஉழைப்பாளர்களின் 
வேர்வையின் மதிப்பு 
என்று தான் சரியான விலைபோகுமோ  

எழுதியவர் : சூரியன்வேதா (9-Oct-17, 11:48 pm)
பார்வை : 399

மேலே