மனிதம்

எங்கு வாழ்ந்தாலும் உயிர் ஒன்று தான்...
உயிரை உயிராக பாருங்கள்...
ஏன் மதமாகவும்...
சாதியாகவும்...
நிறமாகவும்...
இனமாகவும் பார்க்கிறீர்கள்...

பூமியில் மனிதனாக வாழ்ந்து போகத் தான் பிறந்திருக்கிறோம்...

உலகில் மிகக் கொடிய மிருகம் மனிதன்.ஆம் உலகை ஆட்டி படைக்க பகடைகளை உருட்டுகிறான்.
(ஆண்டான் அடிமை இல்லை.
எல்லோரும் சமமானவர்கள்.
அரசனும் ஆண்டியும் சமமானவர்கள்.
இருவருக்கும் உயிர் ஒன்று தானே.எல்லோருக்கும் பூமி ஒன்றே.
பஞ்ச பூதம் ஒன்றே.ரத்தம் ஒன்றே...
அப்புறம் ஏன் சட்டம் வளைகிறது
அரசியத்திற்கு.
நேர்மைக்கு அடி வருகிறது.)

எங்கே நியாயமோ?
இதில் எங்கே சனநாயகமோ?
எங்கே இயற்கை...
பின் எங்கே அதில் வளர்ச்சி...
பூமியை நாடாக பிரித்தால் அது நாட்டை ஆள மட்டுமா...
பூமியை எல்லோரும் காப்பதில்லையா...
பூமியை கொன்று விடாதீர் மனிதமின்றி...

பூமி எல்லோருக்குமானது.
அது ஒருவருக்கில்லை..

உயிர்கள் அனைத்தும் சமமானது.
(புல்லின் உயிருக்கு எம் உயிர் நிகர்)

மனிதம் வாழட்டும் மண்ணில்...

~ பிரபாவதி வீரமுத்து

எழுதியவர் : பிரபாவதி வீரமுத்து (10-Oct-17, 11:31 am)
Tanglish : manitham
பார்வை : 982

மேலே