பெண்மை
என் இதயத்தை தொட்டவளே,
என் எண்ணங்களாக மறிவிட்டவளே,
என் இமைகளைத்தாண்டி விழியில் புதைந்தவளே,
பெற்ற தாய்க்கு நிகராக என் வாழ்வில் வந்தவளே,
தாரம் என்ற ஒற்றை சொல்லாலே தயங்காது உன்னை தந்தவளே,
தாயாகும் முன்னே என்னை தந்தையாக மாற்றியவளே,
தாய்மையின் வலியையும்,வலிமையையும் எனக்கு எடுத்துரைத்தவளே,
பெண்மையும்,தாய்மையுமே உன்னதமான தெய்வங்கள் என உணர்த்தியவளே,
இந்த உலகம் உள்ள வரைக்கும்,மனிதனில் உயிர் உள்ள வரைக்கும்
அவன் கடன்பட்டு கடமையாற்ற வேண்டிய தெய்வங்கள்
பெண்மையும்...
தாய்மையும்...
தாரமும்...